Agriculture Marketing
வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை

 

சிறு தொழில் சேவை நிறுவனங்கள் (SISI)


சிறு தொழில் சேவை நிறுவனங்கள் (எஸ்ஐஎஸ்ஐ) சென்னையானது தமிழ்நாட்டில் உள்ள சிறு தொழல் பிரிவுகளுக்கு நிதி அளித்தல், பொருளாதார தகவல் சேவைகள், பணிமனை வசதிகள், பயிற்சி மற்றும் பொதுவான ஆலோசனை சேவைகள் போன்ற சேவைகளை அளித்து வருகிறது. இந்த நிறுவனம் தமிழ்நாடு மற்றும் மாநிலங்களின் செயற்பாடுகளை உள்ளடக்கியது. இந்த நிறுவனத்தின் நிறுவனம் தமிழ்நாட்டில் இரண்டு கிளைகளாக கோயம்புத்தூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திலும் மற்றும் புதுச்சேரியில் ஒரு விரிவாக்க மையமாகவும் உள்ளது. மேலும் சென்னை எஸ்ஐஎஸ்ஐயின் கீழ் சென்னையில் மத்தியக் காலனி பயிற்சி மையமும், கோயம்புத்தூரில் மின்சார இயந்திர ஆய்வுக்கூடமும் உள்ளது.

பணிமனை வசதிகள் / ஆய்வுகள் / வேலை வழிவகு / வருமானம் ஈட்டு எஸ்ஐஎஸ்ஐ  பிரிவுகள் மற்றும் அதன் ஊழியர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் மற்றும் பயிற்சிகளையும் சிறு தொழில் சேவை நிறுவனமும், அதன் கிளைகளும் அளிக்கிறது. மொத்தம் 792 வேலை பணிமனைகள் ஆகும்.
சென்னை சிறு தொழில் சேவை நிறுவனம் மற்றும் கீழ்நிலை ஊழியர் அலுவலகங்களின் 1991-92  ஆம் ஆண்டில் வருமானம் ரூபாய் 10.21 லட்சங்களை விட 1998-99 ஆம் ஆண்டின் மொத்த வருமானம் ரூபாய் 10.77259 லட்சமாக உயர்ந்துள்ளது.

ஆலோசனை சேவைகள்
நிறுவனத்தின் மூலம் வெவ்வேறு வகையில் தொழில் தொடங்குபவர்களுக்கு கிடைக்கும் முக்கிய தொண்டுகள் பின்வருமாறு
இருக்கும் பிரிவுகளுக்கு தொண்டு

தொழில்நுட்பம்      - 500 எண்ணிக்கை
மேலாண்மை நிர்வாகம - 265 எண்ணிக்கை
வியாபாரம் / சந்தை - 265 எண்ணிக்கை
வருங்காலத்தில் தொழில்   -2268 எண்ணிக்கை

தொடங்குபவர்களுக்கு தொண்டு

பயிற்சி
தொழில் தொடங்குவோரின் முன்னேற்ற நிகழ்ச்சிகள்

  • 1998-99 ஆம் ஆண்டில் சென்னை சிறு தொழில் சேவை நிறுவனமும், அதன் கீழ்நிலை ஊழியர் அலுவலகங்களும், 33 தொழில் தொடங்குவோர் முன்னேற்ற நிகழ்ச்சிகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வெவ்வேறு பகுதிகளில் நடத்தினர். இதில் 1006 நபர்கள் பயிற்சி பெற்றனர்.

எம்டிபி பங்கேற்பு

  • மொத்தம் 10 எம்டிபி பயிற்சியானது, பல்வேறு வகையான தலைப்புகளில் நடத்தப்படுகிறது. இந்தத் தலைப்புகளானது சந்தை, சந்தை நிர்வாகம் மற்றும் சந்தை ஆராய்ச்சி, விற்பனை, உண்டுறை நிர்வாகம் மற்றும் உணவு தயாரித்தல், தரம் கட்டுப்பாடு சந்தைச் சேவைகள் மற்றும் தேவை ஆராய்தல், நிதி நிர்வாகம் போன்றவையாகும். இதில் 194 நபர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.
  • மேலும், 1998-99ல் தமிழ்நாட்டின் வெவ்வேறு இடங்களில் 7 ஊக்கத் திட்டங்களை நடத்தியுள்ளது. இதில் 725 நபர்கள் பங்கேற்றனர்.

துணை நிகழ்வுகள் / சந்தை மற்றும் ஏற்றுமதிகள்
தமிழ்நாட்டின் துணை அபிவிருத்தி உள்ள இடங்களில், நிறுவனமானது 1996-97 ஆம் ஆண்டில் வியாபார முன்னேற்றக் கிடங்குகள் வாங்கும் நிகழ்ச்சிகளின் கீழ் 125 பிரிவுகள், என்எஸ்ஐசி ஆக மாற்றப்பட்டது. 1996-97ல் எஸ்ஐஎஸ்ஐன் அலுவலர்கள் 7 இயந்திர தொகுதி அளவு செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றனர். மேலும் இந்த ஆண்டில் 124 பிரிவுகள் எஸ்சிஎக்ஸ்னால் ஆதரவு பெற்றது.

பொருளாதார மதிப்பீட்டு அறிக்கை
புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு மாநிலமானது, தமிழ்நாட்டில் நான்கு மாவட்டங்களில் தொழில் நுட்பப் பொருளாதாரமர் பற்றிய கருத்தாய்வானது எஸ்எஸ்ஐ பிரிவுகளின் ஆற்றலை பற்றிய அறிவதற்காக 1995-96ல் தயார் செய்யப்பட்டது. மேலும் வியாபார சந்தை பற்றிய கருத்தாய்வு அறிக்கையையும் தயார் செய்யப்பட்டது. இந்தத் தொழில் ஆற்றலைப் பற்றிய கருத்தாய்வானது நடத்தப்பட்டது. இது மட்டுமல்லாமல் 26 திட்டக்குறிப்புகளானது தயார் செய்யப்பட்டு, 1995-96ல் வெளியிடப்பட்டது.

மாவட்டத் தொழில் மையத்துக்கு ஆதரவு

  • எஸ்எஸ்ஐன் ஆதரவானது மாவட்ட தொழில் மையங்களுக்கு பின்வரும் செயற்பாடுகள் மூலம் அறியலாம். SEEVY திட்டத்தில் பணிக்குழு செயற்குழு கூட்டத்தின் மூலம் வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள நபர்களை தேர்ந்தெடுத்தல்.
  • மாவட்ட தொழில் மையங்கள் மூலம் நடத்தப்படும் தொழில் தொடுங்குவோரின் முன்னேற்ற நிகழ்ச்சிகள் மற்றும் தொழில் ஊக்கத் திட்டங்களில் பங்கேற்றுதல்.
  • பல்வேறு மாவட்ட தொழில் மையக் கூட்டத்தின் பொருளாதார மற்றும் தொழில் நுட்பம் பற்றிய கருத்துக்களை பரப்புவதன் மூலம் தொழில் தொடங்குவோரின் ஆற்றலை அதிகரித்தல்.
  • மாவட்ட தொழில் மையத்தின் அதிகாரிகளிள் அதிகாரப்பூர்வமான கொள்திறனின் ஆதரவு அளித்தல் மற்றும் எஸ்எஸ்ஐ பிரிவானது மத்திய  அரசாங்க கிடங்குகள் வாங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுதல்.
  • மாவட்ட தொழில் மையத்தின் துணை மேம்பாட்டுக்காக வாங்குவோர் – விற்போரின் கூட்டம் நடத்தப்படுதல்.
  • திட்டத்தின் கருத்து முடிவு மற்றும் தொழில் நுட்ப பொருளாதாரம் பற்றிய கருத்துக்களை மாவட்ட தொழில் மையங்களுக்கு வழங்குதல், மேலும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்குரிய கருத்துக்களையும் வழங்குதல்.
  • மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மாதிரி கருத்தாய்வானது நடத்தப்படுதல், இதனுடன் மாவட்டத் தொழில் மையத்தின் பதிவு செய்யப்பட்ட தொகுதிகளும் உள்ளடங்கும்.

ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / மகளிர் / பலகீனமான பிரிவுகளுக்கு ஆதரவு
எஸ்ஐஎஸ்ஐஆல் நடத்தப்படும் அனைத்துத் தொழில் தொடங்குவோரின் முன்னேற்ற நிகழ்ச்சிகள், திறன் முன்னேற்ற நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / மகளிர்/ பலகீனமான பிரிவுடைய நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. இந்த நிறுவனம் தொழில் தொடங்வோரின் முன்னேற்ற நிகழ்ச்சியினை ஒரு வாரம், ஒரு மாதம் மற்றும் இரண்டு மாத அளவுகளில் நடத்துகிறது. முக்கியமாக மகளிர்கள் வேதிப்பொருட்கள், உணவு பதப்படுத்துதல், தயார் செய்யப்பட்ட துணிமணிகள் போன்ற சிறு தொழில் பிரிவுகளில் தொழிலை அமைத்துத்  தருதல்.
இந்த வெற்றி பெற்ற தொழில் முனைவோர்கள், வங்கிகள் / நிதி நிறுவனங்களின் மூலம் நிதி ஆதரவு பெற்று தொழிலை மேம்படுத்தினர்.

தரக்கட்டுப்பாடு
சென்னை எஸ்ஐஎஸ்ஐ ஆனது ஈரோடு மாவட்ட தொழில் மையத்துடனும், டிஆர்டிஏவுடன் இணைந்து ஈரோட்டில் வீணாக்குவதைக் கட்டுப்படுத்தும் விழிப்புணர்வை ஒரு நாள் நிகழ்ச்சியாக நடத்தியது. ஐஎஸ்ஓ 9000 விழிப்புணர்வு கல்வி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியான ஐந்து நாட்கள் நடத்தப்பட்டது. மொத்தம் 18 நபர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றிகேள்வி பதில் புகைப்படங்கள்தொடர்பு கொள்ள

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015