மாவட்டங்கள்: திருவள்ளூர், விழுப்புரம், காஞ்சிபுரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர்
முக்கிய பயிர்கள்:
நெல் (7.4 லட்சம் ஹெக்டேர்), தானியங்கள் (2.53 லட்சம் ஹெக்டேர்), பயிர் வகைகள் (2.743 லட்சம் ஹெக்டேர்), கரும்பு (2.646 லட்சம் ஹெக்டேர்), மற்றும் முந்திரி (7038 லட்சம் ஹெக்டேர்).
1.
காஞ்சிபுரம் மாவட்டம்: தொட்டி நீர் பாசன பகுதிகள்:
சாதாரண ஆண்டுகளில் பயிரிடப்படும் பயிர்கள்:
- நெல் (ஆகஸ்ட் – ஜனவரி) – நெல் (ஜனவரி – ஏப்ரல்)
- நெல் (ஆகஸ்ட் – ஜனவரி) – மக்காச்சோளம் (ஜனவரி – ஏப்ரல்)
மிதமான வறட்சி காலங்களில்:
- மக்காச்சோளம் / எள் / கம்பு / காய்கறிகள் (அவரை, கத்திரி) (ஆகஸ்ட் – நவம்பர்) – பயிறு வகைகள் (டிசம்பர் – மார்ச்)
வறட்சி காலங்களில்:
கோதுமை / தீவன மக்காச்சோளம் / தீவன தட்டைப்பயிர் / அவரை / வெண்டை (நவம்பர் – பிப்ரவரி)
நன்கு நீர் நிறைந்த பகுதிகளில்:
- கரும்பு (டிசம்பர் – ஜனவரி) – கட்டை கரும்பு (ஜனவரி – நவம்பர்) – நெல் (டிசம்பர் – மே) – நிலக்கடலை (ஜீன் – செப்டம்பர் / அக்டோபர்)
- நெல் (ஆகஸ்ட் – ஜனவரி) – நெல் (ினவரி – ஏப்ரல்) – நிலக்கடலை (ஏப்ரல் – ஜீன்)
- நெல் (ஆகஸ்ட் – நவம்பர்) – நெல் (டிசம்பர் – மார்ச்) – நெல் (மார்ச் – ஜீலை)
- வாழை (ஜீலை – ஆகஸ்ட்) – கட்டை வாழை (செப்டம்பர் –ஆகஸ்ட்) காய்கறிகள் (செப்டம்பர் – பிப்ரவரி) – மக்காச்சோளம் (பிப்ரவரி – மே)
|