Agriculture
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு | புகைப்படத் தொகுப்பு
வேளாண்மை :: தானியங்கள் :: நஞ்சையில் புழுதிவிதைத்த இறவை நெல்

‘புழுதிவிதைத்த சேற்று நெல்’ என்பதும் உண்டு. இவ்வகையான பயிர் உற்பத்தி காவிரி ஆற்றுப்பாசனமான நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பிரபலமாகிவருகின்றது. ஆற்றின் நீர் வரத்து காலதாமதம் ஆகும் காலத்தில் புழுதி விதைத்து பின்னர் ஆற்றின் பாசனத்தில் சேற்று நெல்லாக மாற்றப்படுகின்றது. சேற்று நெல்லாக மாறுவது ஆற்றின் நீா் வரத்து மற்றும் பருவமழையின் தீவிரத்தைப் பொறுத்து அமைகின்றது.

ஏற்ற பகுதி

  • திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் காவிரியின் கடைமடப் பாசனப்பகுதிகள்

பருவங்கள்

  • சம்பா மற்றும் பின் சம்பா கோடைப் பருவங்கள்

இரகங்கள்

  • ஆகஸ்ட் மாதங்களில் மத்திய கால இரகங்கள், செப்டம்பர் கடைசி எனில் குறுகிய கால இரகங்கள்
  • பாசன வசதியுள்ளதாலும், மழையின் அளவு அதிகம் உள்ளதாலும் உயர் விளைச்சல் தரவல்ல இரகங்கள் தேர்வு செய்யப்படுவது அவசியம்

 

 
Fodder Cholam