|
|
|
இறவையுடன் நஞ்சையில் புழுதிவிதைத்த மானாவாரி நெல்
புழுதிவிதைத்த சேற்று நெல்
இப்பயிர் முறையை ‘பகுதிப்புழுதி-பகுதி சேறு’ என்றும் கூறுவர். இம்முறையில் பயிர் உற்பத்தி. மானாவாரி நெல் உற்பத்தியைப் போன்றது பயிர் வளர்ச்சிப் பகுதியில் நெல்லின் இரண்டாம் பருவமான ‘இனவிருத்திப்பருவத்தில்’ கண்மாய்களில் அந்நாள் வரை தேங்கிய மழை நீரை, பாசனத்திற்கு கண்மாயின் நீரின் அளவைப் பொறுத்து, தொடர்ந்தோ, முக்கிய பயிர் கால கட்டத்திலோ அளிக்கப்ட்டு பயிர் பாதுகாக்கப்படுகிறது. எனவே இம்முறையில் பயிரிட இரகங்கள் தெரிவு செய்வது தற்போதைய உயர் விளைச்சல் தரும் குறுகிய கால இரகங்கள் என்பதை மனதில் கொள்ளல் வேண்டும்.
ஏற்றப் பகுதிகள்
- காஞ்சிபுரம், திருவள்ளுர். இராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, நாகை திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை
பருவங்கள்
- ஜீலை- ஆகஸ்ட் காஞ்சி, திருவள்ளுர், கன்னியாகுமரி
- ஆகஸ்ட் - நாகை, திருவாரூர், புதுக்கோட்டை
- செப்டம்பர் - அக்டோபர் இராமநாதபுரம், சிவகங்கை
நிலம் தயாரித்தல்
- கோடையுழவும் அதன் பிந்திய உழவும்அவசியம்
- எங்கெல்லாம் ‘மண் இருக்கம்’ ஏற்பட வாய்ப்புள்ளதோ அங்கெல்லாம் ஜிப்சம் 1 டன் அடியில் இட்டு கடைசி உழவு செய்யப்படவேண்டும்.
இரகங்கள்
- குறுகிய கால முன்-பின் வறட்சியைத் தாங்க வல்ல இரகங்கள், நாட்டு இரகங்களும்
- உயர் விளைச்சல் தரும் குறுகிய கால இரகங்கள்
விதைப்பு
- விதையின் அளவு 75 கிலோ ஒரு எக்டருக்கு
- விதைநேர்த்தி முறைப்படிச் செய்ய வேண்டும. விதை கடினப்படுத்துதல் (1சதம் பொட்டாஷ் உரத்துடன்) மிகவும் முக்கயிமான பயிர் நேர்த்தியாகும்
- 3/4 அடி அகல, வரிசையில், விதைக்கும் கருவிகள் கொண்டு விதைக்கப்படுவது சாலச் சிறந்தது. விதையின் ஆழம் ஒரு அங்குலமாவது இருத்தல் வேண்டும்
- விதைப்பது பருவ மழைக்கு முந்தையதாக இருத்தல் மிகமிக அவசியம்
பின்செய் நேர்த்தி
- 10 பாக் அசோஸ்பைரில்லம் (1000 கி,ஹெ) மற்றும் 10 பாக்கெட் பாஸ்போபாக்டீரியா (2000 கி,ஹெ) அல்லது அசோபாஸ் 20 பாக்கெட் (4000 கி.ஹெ) ஆகியவற்றுடன் 25 கிலோ தொழு உரம் மற்றும் 25 கிலோ மண் கலந்து வயலில் முதல் மழை வந்தவுடன் தெளிக்கவும்
- பயிர் களைவதும், பாடு நிரப்பலும் விதை முளைத்த 14 முதல் 21 நாட்களுக்குள் அமைதல் நன்று
- மிகவும் வறட்சியான காலங்களில் 1000 பிபிஎம் என்ற அளவில் ( ஒரு மி.லி. லிட்டர்தண்ணீரில்) சைகோசெல்பயிருக்கு தெளித்தல் வேண்டும்
- வறட்சியான காலத்தில் நீரின் தேவையைக் குறைக்க 3 சதம் ‘கயோளின்’ இலையில் தெளித்தலும், ஒரு சத பொட்டாஷ் கரைசலைத் தெளித்தலும் இழைவழி நீர் ஆவியாவதைக் குறைத்து நல்ல பலனைத் தரவல்லது
உர மேலாண்மை
- பொதுவான உர அளவு 752537.5 கிலோ தழை,மணி. சாம்பல் சத்து ஒரு எக்டருக்கு
- ஊட்டமேற்றிய தொழுஉரம் 750 கிலோ 25 கிலோ மணிச்சத்தான சூப்பர் பாஸ்பேட் கலந்தது அடியுரமாக இடப்படவேண்டும்.
- தழைச்சத்து 25 கிலோ, சாம்பல்சத்து 12.5 கிலோ மூன்றுமுறை, பயிர் முளைத்த 20-25 நாட்களில, 40-45 ஆம் நாட்களில் மீண்டும் 60-65 ஆம் நாட்களிலும் இப்படவேண்டும்
- விதைத்தது முதலும், இடையேயும் நல்ல மழை பெய்து, பயிரின் வளர்ச்சி நன்கு அமைந்திருப்பின் இரண்டாம் தருணமான 40 முதல் 5 நாட்களுக்குள் இடப்படும் தழைச்சத்து 40 கிலோவாக அதிகரிக்கப்படலாம். (சாம்பல் சத்து 12.5 கிலோவாகவே இருக்கட்டும்). அதன் பின்னர் குறைந்தது 10 தினங்களுக்காவது தண்ணீர் தேங்கியியருத்தல் ஒரு கட்டாயத் தேவை எனலாம்.
- எங்கெல்லாம் துத்தநாக குறைபாடு காணப்படுகின்றதோ அங்கெல்லாம் ஜிப்ங்சலபேட் 25 கிலோ இடப்படவேண்டும்
- எங்கெல்லாம் இரும்புச்சத்து பற்றாக்குறை காயப்படுகின்றதோ அப்பகுதிகளுக்கெல்லாம் விதைக்கும் முன்பே 50 கிலோ இரும்பு சல்பேட் அளித்தல் அவசியம்
- உயிர் உரங்கள் இடப்படுவது மகசூலைப்பெருக்கவல்லது
- இழைவழி உரமான äரியா 1 சதம் ரூ டிஏபி 2 சதம் கரைசல் இருமுறை, âங்குருத்து உருவான தருணத்திலும், 10 நாட்கள் கழித்து மீண்டும் தெளித்தல் நன்று
களை மேலாண்மை
- முதல் கைக்களை பயிர் முறைத்த 15-21 நாட்களுக்குள் செய்யப்படவேண்டும்
- இரண்டாம் கைக்களை 30-45 நாட்களில் செய்ய ஏற்ற தருணம்
- களைக்கொல்லி கொண்டும் களைகளைக் கட்டுப்படுத்தலாம். அதற்கு பயிர் முளைத்த 5 தினங்களுக்குள் பென்டிமெத்தலின் 1.0 கிலோ அல்லது பிரிடிலாக்குளோர் 7 சேஃப்னர் (சோபிட்) 0.45 கிலோ விதை முளைக்கப்போதுமான மழை பெய்த உடனேயே அளித்தும் களையைக் கட்டுப்படுத்தலாம். களைக்கொல்லி இடப்பட்ட தருணத்தில் எஞ்சிய களைகளைக் களைய கைக்களை 30-35 நாட்களில் மேற்கொள்ளப்படவேண்டும்
நீர் நிர்வாகம்
- விதை முறைத்த 30-35 நாட்களிலிருந்து கண்மாயில் தேக்கிவைத்துள்ள நீர் கொண்டு பாசனம் செய்யபடுதல் வேண்டும்
- ஒவ்வொரு பாசனமும் ஒன்று முதல் 2 அங்குலம் ஆழம் இருத்தலேபோதுமானது
- ‘நீர் மறைய நீர் பாய்ச்சுதல்‘ நல்லது
|
|
தாவர ஊட்டச்சத்து
தாவர வளர்ச்சி ஊக்கிகள்
மகசூலை அதிகரிக்கும்
வழிமுறைகள்
|