-
சேற்று வயல் நேரடி விதைப்பில், களை முளைப்பதற்கு முந்தைய களைக் கொல்லிகளான பிரிடில்லாக்குளோர் 0.75 கிலோ / எக்டருக்கு விதைத்த 8-ம் நாளில் அல்லது பிரிட்டிலாக்குளோர் + சேப்னரை (சோபிட்) 0.45 / எக்டருக்கு என்ற அளவில் தெளிப்பதை தொடர்ந்து விதைத்த 40வது நாளில் ஒருமுறை கைக்களை எடுக்க வேண்டும்.
-
சேற்று வயல் நேரடி விதைப்பில், உருளை விதைப்பான் மூலம் விதைத்து, கோனோ களைக் கருவி கொண்டு விதைத்த 10, 20 மற்றும் 30வது நாளில் களையெடுக்க வேண்டும்.
-
நடவு முறையில், நட்ட 15-20 நாள் மற்றும் 45வது நாளிலும் இருமுறை கைக்களை எடுக்க வேண்டும் அல்லது 3.0லி / எக்டர் என்ற அளவில் பென்டிமெத்தாலின் களைக் கொல்லியை நட்ட 8வது நாளில் உகந்த ஈரப்பதத்தில் தெளிப்பதை தொடர்ந்து நட்ட 45வது நாளில் ஒரு முறை கைக்களை எடுக்க வேண்டும்.
-
இரட்டை பயிர் முறையில் சேற்று வயல் நேரடி விதைப்பு நெல் மற்றும் தக்கைப் பூண்டை பயிரிடும் போது அதன் உற்பத்தி திறன் மற்றும் பொருளாதார வருவாயை மேம்படுத்த களை முளைப்பதற்கு முந்தைய களைக் கொல்லியான பிரிட்டில்லாகுளோர் + சேப்னரை 0.45 கிலோ / எக்டர் என்ற அளவில் தெளிப்பதை தொடர்ந்து கோனோ களைக் கருவி கொண்டு வரிசைகளுக்கு இடையிலும், வரிசைகளுக்கு உள்ளே கைக்களை மூலமும் விதைத்த 35வது நாளில் களை எடுக்க வேண்டும்.
-
களை முளைப்பதற்கு முன் களைக் கொல்லியான பிரிட்டில்லாகுளோர் + சேப்னரை 0.45 கிலோ / எக்டர் என்ற அளவில் விதைத்த 3 ஆம் நாளில் தெளிக்கவும் + ரோட்டோ உருளை வடிவ களைக் கருவி மூலம் விதைத்த 45வது நாளில் களை எடுக்க வேண்டும். இதன் மூலம் எகினோக்ளோவா கிரஸ்கல்லி, பேனிகம் ரெபன்ஸ், எக்லிட்டா ஆல்பா மற்றும் மோனோகோரியா வஜினேலிஸ் போன்ற களைகளை கட்டுப்படுத்துவதுடன் அதிக தானிய மகசூல், நிகர லாபம் மற்றும் வரவு செலவு விகிதத்தை பெறலாம்.
-
பாசன மற்றும் மானாவாரி நேரடி நெல் விதைப்பில் களை முளைப்பதற்கு முன் களைக் கொல்லியான பிரிட்டில்லாகுளோர் 0.45 கிலோ / எக்டரை விதைத்த மூன்றாம் நாளிலும் அசிம்சல்பூரான் 35 கிராம் / எக்டரை விதைத்த 20வது நாளிலும் அதனை தொடர்ந்து விதைத்த 45 நாளிலும் கைக்களை எடுக்க வேண்டும்.
-
தக்கைப் பூண்டை ஊடுபயிராக பயிரிடும் போது பிரிட்டில்லாகுளோர் + சேப்னரை 0.45 கிலோ / எக்டர் என்ற அளவில் விதைத்த 4வது நாளில் தெளிப்பதை தொடர்ந்து விதைத்த 35வது நாளில் கைக்களை எடுக்க வேண்டும். இதுன் மூலம் அதிக உற்பத்தி திறனை பெறலாம்.
-
நெல் – நெல் – தரிசு பயிர் முறையில் செஸ்போனியா ரோஸ்ட்ரோடாவை பயிரிட்டு வயலில் அமுத்தி விடுவதால் களைகளைக் கட்டுப்படுத்தலாம். இதனை தொடர்ந்து நட்ட 35வது நாளில் ஒரு கைக்களை எடுக்க வேண்டும்.