Agriculture
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு | புகைப்படத் தொகுப்பு
வேளாண்மை :: தானியங்கள் :: இறவையுடன் நஞ்சையில் புழுதிவிதைத்த மானாவாரி நெல்

புழுதிவிதைத்த சேற்று நெல்

இப்பயிர் முறையை ‘பகுதிப்புழுதி-பகுதி சேறு’ என்றும் கூறுவர். இம்முறையில் பயிர் உற்பத்தி. மானாவாரி நெல் உற்பத்தியைப் போன்றது பயிர் வளர்ச்சிப் பகுதியில் நெல்லின் இரண்டாம் பருவமான ‘இனவிருத்திப்பருவத்தில்’ கண்மாய்களில் அந்நாள் வரை தேங்கிய மழை நீரை, பாசனத்திற்கு கண்மாயின் நீரின் அளவைப் பொறுத்து, தொடர்ந்தோ, முக்கிய பயிர் கால கட்டத்திலோ அளிக்கப்பட்டு பயிர் பாதுகாக்கப்படுகிறது. எனவே இம்முறையில் பயிரிட இரகங்கள் தேர்வு செய்வது தற்போதைய உயர் விளைச்சல் தரும் குறுகிய கால இரகங்கள் என்பதை மனதில் கொள்ளல் வேண்டும்.

ஏற்றப் பகுதிகள்

  • காஞ்சிபுரம், திருவள்ளூர். இராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, நாகை திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை

பருவங்கள்

  • ஜீலை- ஆகஸ்ட் காஞ்சி, திருவள்ளூர், கன்னியாகுமரி
  • ஆகஸ்ட் - நாகை, திருவாரூர், புதுக்கோட்டை
  • செப்டம்பர் - அக்டோபர் இராமநாதபுரம், சிவகங்கை

இரகங்கள்

  • குறுகிய கால முன்-பின் வறட்சியைத் தாங்க வல்ல இரகங்கள், நாட்டு இரகங்களும்
  • உயர் விளைச்சல் தரும் குறுகிய கால இரகங்கள்
   
 
Fodder Cholam