Agriculture
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு | புகைப்படத் தொகுப்பு
வேளாண்மை :: தானியங்கள் :: இறவையுடன் நஞ்சையில் புழுதிவிதைத்த மானாவாரி நெல்

விதைப்பு

  • விதையின் அளவு 75 கிலோ ஒரு எக்டருக்கு.

  • விதைநேர்த்தி முறைப்படிச் செய்ய வேண்டும். விதை கடினப்படுத்துதல் (1சதம் பொட்டாஷ் உரத்துடன்) மிகவும் முக்கியமான பயிர் நேர்த்தியாகும்.

  • விதைப்பிற்கு முன் கடினப்படுத்தப்பட்ட விதைகளை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனஸ் ப்ளோரசன்ஸ் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து எக்டருக்கு 1 கிலோ அசோபாஸ் அல்லது 1 கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

  • 3/4 அடி அகல, வரிசையில், விதைக்கும் கருவிகள் கொண்டு விதைக்கப்படுவது சாலச் சிறந்தது. விதையின் ஆழம் ஒரு அங்குலமாவது இருத்தல் வேண்டும்.
  • விதைப்பது பருவ மழைக்கு முந்தையதாக இருத்தல் மிகமிக அவசியம்.
   
 
Fodder Cholam