Agriculture
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு | புகைப்படத் தொகுப்பு
வேளாண்மை :: தானியங்கள் :: நஞ்சையில் புழுதிவிதைத்த மானாவாரி நெல்

மானாவாரி நெல்

இவ்வகை நெற்பயிரின் வளர்ச்சி, வயது மற்றும் மகசூல் மழையின் அளவைப் பொறுத்தே அமைகின்றது. புழுதி விதைக்கப்பட்டு வறட்டுகளை எடுக்கப்பட்டாலும் மழை தொடர்ந்து பெய்யும் தருணத்தில் வயலில் நீர் தேங்கி சேற்று வயல் போல் மாற்றம் அடையும் தன்மை உண்டு. பொதுவாக பயிரின் ஆரம்ப காலத்திலும், கதிர் முற்றும் காலத்திலும் மழை குறைவாக அல்லது நின்றுவிடக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளதால் ‘வறட்டு நெல்’ என்றும் கூறப்படுவது உண்டு. இம்முறையைப் பயிரை ‘மானாவாரி’ என்பது வழக்கம்.

ஏற்ற பகுதிகள்

  • கடற்கரை மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளுர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மற்றும் கன்னியாகுமரி

பருவங்கள்

  • ஜீன் - ஜீலை – வடகடற்கரை மாவட்டங்கள்
  • செப்டம்பர் – அக்டோபர் – தென் கடற்கரை மாவட்டங்கள்

இரகங்கள்

  • குறுகிய கால முன்-பின் வறட்சியைத் தாங்கக்கூடிய ரகங்கள்
  • அப்பகுதிகளுக்கேற்ற ‘நாட்டு ரகங்கள்’
   
 
Fodder Cholam