Agriculture
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு | புகைப்படத் தொகுப்பு
வேளாண்மை :: தானியங்கள் :: நஞ்சையில் புழுதிவிதைத்த மானாவாரி நெல்

களைமேலாண்மை

  • முதல் கைக்களை பயிர் முளைத்த 15-21 நாட்களுக்குள் செய்யப்படவேண்டும்.

  • இரண்டாம் கைக்களை 30-45 நாட்களில் செய்ய ஏற்ற தருணம்.

  • களைக்கொல்லி கொண்டும் களைகளைக் கட்டுப்படுத்தலாம். அதற்கு பயிர் முளைத்த 5 தினங்களுக்குள் பென்டிமெத்தலின் 1.0 கிலோ அல்லது பிரிடிலாக்குளோர் + சேஃப்னர் (சோபிட்) 0.45 கிலோ, விதை முளைக்கப்போதுமான மழை பெய்த உடனேயே அளித்தும் களையைக்கட்டுப்படுத்தலாம். களைக்கொல்லி இடப்பட்ட தருணத்தில் எஞ்சிய களைகளை களைய கைக்களை 30-35 நாட்களில் மேற்கொள்ளப்படவேண்டும்.

  • விதைத்த பின் களை முளைப்பதற்கு முன் களைக் கொல்லியான பிரிடிளாகுளோர் + சேப்னரை எக்டருக்கு 0.3 கிராம் என்ற அளவில் தெளிப்பதைத் தொடர்ந்து இரண்டு முறை ஸ்டார் அல்லது சுழல் களைக் கருவி கொண்டு களையெடுக்க வேண்டும்.

 

   
 
Fodder Cholam