Agriculture
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு | புகைப்படத் தொகுப்பு
வேளாண்மை :: தானியங்கள் :: நஞ்சையில் சேற்று நெல்
இடர்பாடு மண்ணுக்குரிய சிறப்பு தொழில்நுட்பங்கள்
  • இருக்கம்படாத சேற்று மண் இவ்வகையான மண்ணில் உழுகின்ற இயந்திரமோ கால் நடைகளோ நகரமுடியாத நிலை ஏற்படுகின்றது. இந்நிலையைக் குறைக்கவோ தவிர்க்கவோ 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை 400 கிலோ எடையுள்ள ‘கல் உருளை’ அல்லது எண்ணை தகரத்தினுள்ள கற்கள் நிரப்பிய உருளை சரியான ஈரப்பத்தில், எட்டு முறை திரும்பத்திரும்ப இழுக்கப்படுவதால், மண் இறுகி பதப்பட வாய்ப்புள்ளது.
  • உவர் நிலம் ( 8.5க்கு மேல்) இம்மாதிரியான நிலத்தினை நன்கு உழுது அந்நிலத்தின் ‘ஜிப்சம் தேவை’யின் பாதி அளவிற்கு, ஜிப்சம் இடப்படுதல் வேண்டும். மேலும் 5 டன் பசுந்தழை உரத்தினையும் இட்டு நன்கு மிதித்து, பின்னர் சரியான முறையில் வடிகால் அமைத்து, தொடர்ந்து 10-15 நாட்களுக்கு நீர் நிறுத்தி வரவேண்டும். அதன் பின்னர் நடவு செய்யலாம். நடவிற்கு முன்னர் 37.5 கிலோ ஜிங்க் சல்பேட் சம அளவு மணலுடன் கலந்து வயலின் மேற்பரப்பில் தூவிவிடவும்.
  • களர் நிலம் (மேல் காணப்படும் தருணத்திற்கு) குறுக்கு நெடுக்காக ஆழ் வடிகால் அமைத்து, 5டன் பசுந்தழை உரமிட்டு 10-15 நாட்கள் நீர் கட்டி நீர் மண்ணினுள் ஊடுருவி மறைந்து விடுவதே போதுமானது. நடவு செய்ய 25 சதம் அதிகம் தழைச்சத்து அடியுரமாக இடப்படவேண்டும். ஜிங்சல்பேட் உவர் நிலத்திற்கு கூறப்பட்டது போல் செய்யப்படவேண்டும்
  • அமிலத்தன்மையுடைய நிலவகைகளுக்கு சுண்ணாம்புக்கல் 2.5 டன் ஒரு எக்டருக்கு இடப்பட்டு நடவு செய்யப்பட வேண்டும். இம்முறை தொடர்ந்து ஐந்தாவது பயிர் வரை பின்பற்றப்படவேண்டும்
 

 

   
Fodder Cholam