நாற்றின் வயதும் பயிர் வளர்ச்சியும்
- குறுகிய கால் ரகமாயின் 18 முதல் 22 நாட்கள் நாற்றுக்கள் மத்திய கால தகமெனில் 25-30 நாட்கள் நீண்ட கால ரகமெனில் 35-40 நாட்கள் தக்கவயது எனக்கொள்ளவும்.
நாற்றங்காலிலிருந்து பிரித்து நடவு செய்தல்
- தக்க பருவத்தில் - நான்கு இலைப் பருவத்தில் நாற்றுக்கள் பிரித்து நடப்படவேண்டும்
- மூன்று இலைப் பருவத்திலேயே நடவு செய்யலாம். அவ்வாறு செய்வதால் அதிகமான தூர் கட்ட சந்தர்ப்பம் உள்ளது. சற்றேக் கவனத்துடன் நீர் பராமரிப்பு, நிலம் சமன் படுத்துதல் போன்றவைகள் மேற்கொள்ளப்படவேண்டும். மேலும் விளக்கத்திற்கு திருந்திய நெல் சாகுபடிப் (பகுதி 1.8) பகுதியைப் பார்க்கவும்.
- ஐந்து இலை, அதற்கு மேல் வயது ஆகிவிட்ட நாற்றுக்கள், தேவயைான பயிர் வளர்ச்சியைத் தராமல் மகசூல் குறைய வாய்ப்புகள் அதிகம். அவ்வாறு வயதான நாற்றுக்களை நடவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் தனிச் சிறப்பு பயிர் வளர்ப்பு முறைகள் பின் பற்றப்பட வேண்டும்.
நடவிற்கு முன் நாற்றின் வேரை நுண்ணுயிருடன் நனைத்தல்
40 லிட்டர் தண்ணீரில் 5 பாக் (1000 கி/ஹெ) அசோஸ்பைரில்லம் மற்றும் 5 பாக் பாஸ்போபாக்டிரியா (1000 கி/ஹெ) அல்லது 10 பாக் அசோபாஸ் (2000 கி/ஹெ) கலந்து கரைசலை தயாரிக்கவும். இக்கரைசலில் நாற்றுக்களின் வேர்பாகம் நன்கு நனையுமாறு 15-30 நிமிடங்கள் வைத்திருந்து நடவுக்கு பயன்படுத்தவும்.
நடவு
- பயிர் எண்ணிக்கையும் இடைவெளியும்
மண் |
குறைவான மண்வளம் |
சிறப்பான மண்வளம் |
இரகத்தின்வயது |
குறுகிய காலம் |
மத்திய காலம் |
நீண்ட காலம் |
குறுகிய காலம் |
மத்திய காலம் |
நீண்ட காலம் |
இடைவெளி (செ.மீ) |
15 × 10 |
20 × 10 |
20 × 15 |
20 × 15 |
20 × 15 |
20 × 20 |
குத்துக்கள் |
66 |
50 |
33 |
50 |
33 |
25 |
- குறுகியகால ரகமென்றால் 2-3 நாற்றுக்களும், மத்திய கால, நீண்டகால ரகமெனில் 2 நாற்றுக்களும் நடவு செய்யப்படவேண்டும்.
- மேலாக நடுவது (3.- செ.மீ) விரைவான வளர்ச்சியைத் தரவல்லது, அதிக தூர் பிடிக்கச் சந்தர்ப்பம்
- மிகவும் ஆழமாக (7.5 செ.மீ) நடுவது காலம் தாழ்த்தி பயிர் உயிர் பிடிப்பதும் தூகள் குறைவாகக் தோன்றவும் வழிவகுக்கும்
- நாற்றுக்கள் மண்ணின் மீது தூவப்படுவது அல்லது வைக்கப்படுவது நடுவதை விட சிறப்பு வாய்ந்தது (மேலும் விளக்கத்திற்கு பகுதி 1.6 யைப் பார்க்கவும்)
- மிகவும் ஆழத்தில் நடுவதல் (2 அங்குலத்திற்கு மேல்) பயிர் பச்சை பிடித்து வளர்ச்சியடைவது காலம் தாழ்த்தப்படுகிறது. மேலும், தூர்களின் எண்ணிக்கை குறைவாகவே அமையும்.
- வரிசையில் நடவு செய்வதால் ‘களை எடுக்கும் கருவி’ பயன்படுத்துதல் மற்றும் அதன் வழி தோன்றும் பலாபலனைத் தரவல்லது.
- களை எடுக்கும் கருவி பயன்படுத்த குறைந்த பட்சம் 20 செ.மீ. அகலமுள்ள வரிசை அமைப்பு தேவைப்படுகின்றது.
வயதான நாற்றுக்களை நடும் தருணத்தில்
- குறைவான மண்வளம் உள்ள நிலங்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட பயிர் இடைவெளியில்பயிரிடவேண்டும்
- ஒன்று அல்லது இரண்டு நாற்றுக்களுக்குமேல் நடவு செய்யக்சகூடாது
- வயதான நாற்றுக்கள் கற்றையாக நடவு செய்வதால் தூர் கட்டுவது தடைபடுகின்றது.
- வயதான நாற்றுக்களிலிருந்து வெடிக்கின்ற தூர்கள் மட்டுமே அறுவடைவரை நிலக்கும் என்பதையும், சரியான கதிர் எடையுள்ளதாக அமையும் என்பதையும் உணர்ந்து பராமரிப்பு அமைதல் வெண்டும்.
- புதியதாக தூர் வெடிக்கவும் அத்தூர் இரண்டாம் மூன்றாம் தூர்களை ஈனவும் தழைச்சத்து அடியுரமாக பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட 50 சதம் அதிகமாக இடப்படுதல் வேண்டும். மற்ற தருணங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட உர அளவே பின் பற்றப்படுதல் போதுமானது.
பாடு நிரப்புதல்
- நட்ட 7 முதல் 10 நாட்களுக்குள் பாடு நிரப்பப்படவேண்டும
|