களையைகட்டுப்படுத்த உருளைச்சக்கர களை எடுப்பானை நடவு நட்ட 15-ஆம் நாளும் அதன் பின்னர் 10 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறையும் பயன்படுத்தலாம். களை எடுக்கும் செலவு குறைக்கப்படுவதுடன் வேர்ப்பகுதிக்கு ஆக்சிஜன் கிடைப்பதுடன், வேரின் ஆற்றல் திறன் சீரமைக்கப்பட்டு உணவுப்பொருட்கள் சிறப்பாக மாற்றல் அடைந்து, நெல்லின் கதிர்மணிகள் அதிகம் பிடித்து மகசூல் அதிகமாக வாய்ப்புள்ளது.
நெல்லுடன் அசோல்லா வளர்ப்பதாலும், நெல்லும்-பசுந்தாள் ஒன்றாக பயிரிடுவதாலும் களையின் ஆதிக்கத்தைக் குறைக்கலாம்.
- கோடை உழவு மற்றும் கோடை காலப்பயிர்கள் பயிர்த்திட்டத்தில் சேர்க்கப்படும்போது களையின் தீவிரம் குறைய வாய்ப்புள்ளது.
களை முளைப்பதற்கு முன் களைக்கொல்லிகள்
பூட்டாக்குளோர் 1.25 கிலோ அல்லது அனிலோபாஸ் 0.40 கிலோ என்ற அளவில் பயன்படுத்தலாம். மாற்றாக களை முளைப்பிற்கு முந்திய களைக்கொல்லிகளின் கலவையையும் பயன்படுத்தலாம். அவையாவன பூட்டாக்குளோர் 0.6 கிலோ + 0.75 கிலோ 2,4 DEE அல்லது அனிலோபாஸ் 2,4 DEE ‘தயார் – கலவை’. தெளிக்கப்பட்டு நட்ட 30-35 ஆம் நாளில் கைக்களை எடுத்தல் வேணடும்
- களைக்கொல்லி 50 கிலோ உலர்ந்த மணலுடன் கலக்கப்பட்டு, நட்ட 3 அல்லது 4-ம் நாளில் மண் மறையுமாறு சிறிய அளவு நீர் நிறுத்தி தூவப்படவேண்டும். நீர் வடித்தலோ, கட்டுதலோ அடுத்த இரண்டு நாட்களுக்குத் தவிர்த்தல் வேண்டும்.
களைமுளைத்த பின்னர் இடும் களைக்கொல்லிகள்
|