Agriculture
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு | புகைப்படத் தொகுப்பு
வேளாண்மை :: தானியங்கள் :: நஞ்சையில் சேற்று நெல்
சேற்று நாற்றங்கால்

நாற்றங்காலின் பரப்பு

  • 20 சென்ட் (800 சதுர மீட்டர்) தண்ணீர் வசதியுடன் ஒரு எக்டர் நடவிற்குத் தேவை

விதை அளவு

  • ஒரு எக்டர் நடவு செய்திட நீண்ட கால ரகம் எனில் 30 கிலோ, மத்திய காலமாயின் 40 கிலோ, குறுகிய கால இரகம் என்றால் 60 கிலோ தேவைப்படுகின்றது

விதை நேர்த்தி

  • ஒரு கிலோ விதைக்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்ற வீதத்தில், கார்பன்டஜிம் அல்லது பைரோகுயிலான் 2 கிராம் அல்லது டிரைசைக்லோஜோல் கரைசல் 2 மி.லி. கலந்து 10 மணி நேரம் ஊர வைத்து பின்னர் வடிகட்டவும்
  • இம்முறையினால் இளம் வயதில் பாதிக்கக்கூடிய தோகை எரிப்பு நோயிலிருந்து 40 நாட்கள் வரை பாதுகாப்பு கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
  • இவ்வாறு ஊர வைத்த விதையை உடன் விதைக்க வேண்டுமெனில் நனைந்த கோனிச் சாக்கில் கட்டி மூடி, 24மணி நேரம் இருட்டில் வைத்து முளை எட்டி, பின்னர் விதைக்கலாம். அல்லது நிழலில் உலர்த்தி தக்க ஈரப்பதத்தில் சேமித்து பின்னர் விதைக்கலாம்
  • சூடோமோனாஸ் ஃபுளுரசன்ஸ் கலத்தல் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து 10 மணி நேரம் வைத்து நீரை வடிகட்டி, பின்னர் மேற்கூரிய முறையைப் பின்பற்றி விதைக்கலாம்
  • மூன்று பாக்கெட் அடீசாஸ்பைரில் (600 கி/ஹெ) மற்றும் 3 பாக்கெட் பாஸ்போபாக்டீரியா (700 கி/ஹெ) அல்லது 3 பாக்கெட் அசோபாஸ் (1200 கி/ஹெ) ஆகிய நுண்ணுயிர் உரங்களுடன் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து விதைககளை விதைப்புக்கு முன் ஒரு இரவு முழுவதும் ஊறவைக்கவும் (விதைகளை நீக்கிய பின் கிடைக்கும் கரைசலையும் நாற்றங்காலில் விடலாம்).
    • உயிரியல்கட்டுப்பாடு இனங்கள் நுண்ணுயிர் உரங்களுடன் ஏற்புடையன
    • எனவே விதை நேர்த்திக்கு இவை இரண்டும் கலந்து விதை நேர்த்தி செய்யலாம்
    • பூஞ்ஞானங் கொல்லியும் உயிரியல் கட்டுப்பாடு இனங்களும் ஒவ்வாமையையுடையன

நாற்றங்கால் தயாரிப்பு

  • தயாரிக்கப்பட்ட நிலம்2.5 மீ (8 அடி) அகலமுள்ள பாத்திகளாக, 30 செ.மீ ( ஒரு அடி) இடைவெளியுள்ளவாய்க்கால் பாத்தியைச்சுற்றிலும் அமைக்க வேண்டும்
  • பாத்தியின் நீளம் 8 முதல் 10 மீ வரை நிலத்தின் சமன் அமைப்பு. மண்ணின் தன்மையைப் பொறுத்து அமைக்கலாம்
  • வாய்க்கால் அமைக்கும் போது எடுக்கப்பட்ட மண்ணை பாத்தியில் பரப்பி நிரவலாம் அல்லது வாய்க்காலை சீந்தி மூலம் அமைக்கலாம்
  • பாத்தி சமன்படுத்தப்படுவது மிகவும் அவசியம்

விதைப்பு

  • முளைகட்டிய விதையினை பாத்தியில் பரவலாக தூவ வேண்டும். தண்ணீர் அளவு 1-2 செ.மீ. அளவு இருத்தல் நல்லது

 
Fodder Cholam