வேளாண்மை :: தானியங்கள்
   

சேற்றுவயல் நேரடி விதைப்பு
முளை கட்டிய விதைப்பு, நேரடிவிதைப்பு
ஏற்ற பகுதிகள்
  • தமிழத்தின் எல்லாப் பகுதிகளிலும் எங்கெல்லாம் சேற்று நடவு செய்யப்படுகின்றதோ அங்கெல்லாம் நேரடி விதைப்பும் செய்யலாம்.
பருவம்
  • நடவு முறைக்கு பருவங்கள் இதற்கும் சரியான பருவங்கள்
நிலம் தயாரித்தல்
  • கோடையுழவு அவசியம்
  • விதைப்பதற்கு முன்பாக நீர் எட்டி சேற்றுழவு செய்யப்படுதல் வேண்டும்
  • மிகமிக அவசியம் நிலம் நாற்றங்காலைப் போன்றே சமன் செய்யப்படுதல்
  • இங்கும் அங்கும் மேடு பள்ளமாகவோ, குண்டும் குழியுமாகவோ இருப்பின் அங்கெல்லாம் நீர் தேங்கி நாற்றுக்கள் சரி வர முளைக்காமல் இடைவெளி அதிகம் காணப்படும்.
  • நிலம் சமன்படுத்துதல் நீர் மேலாண்மைக்கும், களை மேலாண்மைக்கும் அடிப்படைத் தேவைகள் என்பதை நன்கு உணர்ந்து. தக்கவாறு நிலம் சமன் படுத்தப்பட வேண்டும்.
  • அரை அடி அகழத்தில் சிறிய வடிகால் வாய்க்கால்கள் நிலத்தின் குறுக்கேயும், 3 மீ இடைவெளியிலும், வரப்பின் ஒரத்திலும் அமைத்தல் நல்லது.

விதைப்பு

  • எக்டருக்கு 60 கிலோ
  • முளை கட்டிய விதைகள்
  • விதை நேர்த்தி முன்னர் குறிப்பிடப்பட்டவை போன்றே
  • மண் மறைய சிறிய அளவில் நீர் வைத்து நேரடியாகக் கையாலும், சேறும் சகதியுமான சூழ்நிலையில் உருளை விதைப்பான் முலமூம் விதைக்கலாம்
  • ‘இருபயிர்’ முறை என நெல்லும்-பசுந்தாள் உரமும் ஒருங்கே விதைத்து உர நிர்வாகத்தில் சிக்கனமும், மககசூலில் மேன்மையும் பெறலாம். இதற்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள ‘நெல் - பசுந்தாள்’ விதைப்பானைப் பயன்படுத்தலாம்

பின்செய் நேர்த்தி

  • பயிர் களையப்படுவதும், பாடு நிரப்பப்படுவதும் விதைத்த 14-21 ஆம் நாட்களில் செய்யப்படவேண்டும். இது மிகவும் முக்கியமான பயிர் செய் நேர்த்தியாகும்
  • நெல்லும் பசுந்தாள் பயிரும் ஒருங்கே பயிரிடப்பட்டடிருந்தால், பசுந்தாள் செடியினை 40 செ.மீ (சுமார் 11/4 அடி) வளர்ச்சியில் அல்லது விதைத்த 30 நாட்களில், இதில் எந்த நிலை முந்துகின்றதோ அப்பொழுதே ‘உருளைக் களை எடுப்பான்’ கருவியைக் கொண்டு மடக்கி அழுத்தி மிதித்து விடல் வேண்டும்.
  • சந்தர்ப்பம் கிடைக்குமானால் மீண்டுமொருமுறை 7-10 நாட்களுக்குள் ‘உருளைக் களை எடுப்பானை’ நெல் வரிசைகளுக்கு இடையே இழுப்பதால் வேரிற்கு புது பிராணவாயு கிடைக்கவும், தேவையற்ற அங்கக அமிலங்கள் வெளியேறவும் வாய்ப்புகள் அதிகம். பயிாின் வேர் புத்துயிர் பெற்று பயிர் மேலோங்கி, நல்ல மகசூல் தரவல்ல ஒரு பயிர் செய் நேர்த்தி என்பதை உயர்தல் வேண்டும்
உரமிடுதல்
  • நடவு முறைக்கு பரிந்துரைக்கப்பட்ட உர அளவுகள் இம்முறைக்கும் ஏற்றது
  • தழைச்சத்து, சாம்பல் சத்து இரண்டையும் 25 சதங்களாகப் பிரித்து விதைத்த 21 நாட்கள் விரைந்து தூர் பிடிக்கும் பருவம், âங்கதிர் உருவாகும் பருவம் மற்றும் கதிர் வெளிவரும் பருவங்களில் இடுதல் வேண்டும்
  • பரிந்துரைக்கப்ட்ட மணிச்சத்து முழுவதுமோ அடியுரமாக கடைசி உழவின் போது அளிக்கப்படுதல்வேண்டும்
  • உயிர் உரங்கள் நடவுமுறை பயிரிருக்கு பரிந்துரைக்கப்பட்டது போன்றே
  • நுண்ணூட்டச்சத்துக்கள், இழைவழி உரமிடுதல் போன்றவகைகளும் இப்பயிர்க்கும் பின்பற்றப்பட வேண்டும். நடவு முறையில் கூறப்பட்டதே இதற்கும் பொருந்தும்
களை மேலாண்மை
  • களை முளைப்பதற்கு முந்திய களைக்கொல்லிகளான பிரிடில்லாக்குளோர் 0.75 கிலோ நட்ட 8-ம் நாள் இடப்படவேண்டும். அல்லது பிரிடில்லாக்குளோர் ரூ சேஃபனருடன் கலந்த ‘சோபிட்’ எனில் 0.45 கிலோ என்ற அளவில், விதைத்த 3அல்லது 4-ம் நாளில் இடப்படவேண்டும்கைக்களை 40-ம் நாளில் தேவைக்கேற்ப தரப்படவேண்டும்.
நீர் மேலாண்மை
  • விதைத்த முதல் வாரத்தில் மண் நனைய நீர் பாய்ச்சுதல் போதுமானது. களைக்கொல்லி இடப்பட்டருப்பின் அதகற்கு ஏற்றவாறு நீர் கட்டுவது வேண்டும்
  • நீரின் ஆழம் பயிரின் வளர்ச்சிக்கேற்ப படிப்படியாக ஒரு அங்குலம் வரை அதிகரிக்கப்படலாம்
  • அதன்பின்னர் நடவு முறையில் கூறப்பட்ட வழிமுறையைப் பின்பற்றவும்

 
 
 
 
 
 
 

Crop Protection

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008

Fodder Cholam Rice Wheat maize sorghum Ragi cumbu varagu panivaragu samai tenai blackgram cowpea cowpea redgram soybean horsegram garden lab lab groundnut sesame coconut sunflower castor niger safflower sugarcane sugarcane sugarbeet Cumbu Napier kollukattai Pul Fodder Cholam Fodder Cowpea Fodder Cumbu Fodder Maize Guinea Grass Velimasal Soundal Kudiraimasal Muyal Masal sword bean Field lab lab Sweet Sorghum Greengram