Agriculture
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு | புகைப்படத் தொகுப்பு
வேளாண்மை :: தானியங்கள் :: திருந்திய நெல் சாகுபடி
ஊட்டச்சத்து மேலாண்மை
  • நடவு நெல்லுக்குரிய முறை.
  • தழைச்சத்து மேலாண்மையில் இலை வண்ண அட்டையைப் பயன்படுத்தல் மிகவும் நன்மை தரும்.
  • பசுந்தாள் உரம் மற்றும் தொழு உரம் பயன்பாடு வளர்ச்சி மற்றும் நெல் மகசூலை அதிகரிக்கும்.
  • களர் மண்ணுக்கு, களைக்கருவியின் உபயோகத்தின் போது அஸோபாஸ்மேட் இடுதல், 2.2 கிலோ அஸோபாஸ்மேட் மற்றும் பி.பி.எப்.எம்., சேர்த்து எக்டருக்கு 500 மிலி தெளிப்பு முறையில்  இட வேண்டும்.
இலை வண்ண அட்டை மூலம் தழைச்சத்து மேலாண்மை
  • இலை வண்ண அட்டையின் அளவீடுகள் மூலம்  தழைச்சத்து இடும் நேரம் அறிவிக்கப்படுகிறது.
  • விதைத்த 14 நாட்களுக்குப் பிறகு  நடப்பட்ட நெல்லில் அளவீடுகள் எடுக்க வேண்டும் அல்லது நேரடி நெல் விதைத்த 21 நாட்களுக்குப் பிறகு அளவீடுகள் எடுக்க வேண்டும்.
  • பூப்பூக்கும் பருவத்திற்கு முன் வரை வார இடைவெளியில் திரும்பத் திரும்ப அளவீடுகள் எடுக்க வேண்டும். 
  • இலையின் நிறத்தை அளவெடுத்து, மேலிருந்து மூன்றாவது இலை தான் குறியீட்டு இலை.
  • இலை வண்ண அட்டையின் மூலம் காலையில் 8லிருந்து 10 மணிக்குள் இலையின் நிறத்தைப் பொருத்திப் பார்க்க வேண்டும்.
  • அளவீடுகளைப் பத்து இடத்தில் எடுக்க வேண்டும்.
  • வெள்ளைப் பொன்னியில் இலை வண்ண அட்டையின் குறிப்பிட்ட மதிப்பு 3க்கும் குறைவாக இருந்தால் தழைச்சத்து குறைவு மற்றும் மற்ற ரகங்கள் மற்றும் வீரிய ரகங்களில் 4 க்குக் குறைவாக இருந்தால்  தழைச்சத்து குறைவு என அறியப்படுகிறது.
  • 10 க்கு 6 அளவீடுகள் குறிப்பிட்ட வண்ண மதிப்பிற்குக் குறைவான மதிப்பீட்டைக் காட்டுவதினால் தழைச்சத்து இட வேண்டும். வறண்ட பருவத்தில் ஒரு எக்டருக்கு 35 கிலோ தழைச்சத்து மற்றும் 30 கிலோ தழைச்சத்து இறவைப் பருவத்தில் இட வேண்டும்.
  • இந்த அணுகுமுறையில் இலை உரம் மற்றும் மண்புழு உரம் இடுவதால் நெல்லின் வளர்ச்சியையும் மகசூலையும் உயர்த்தும்.