Agriculture
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு | புகைப்படத் தொகுப்பு
வேளாண்மை :: தானியங்கள் :: கோதுமை
பயிர் மேலாண்மை - பின்செய் நேர்த்தி

களைக் கட்டுப்பாடு

  • விதைத்த 3 நாட்களுக்கு பின்னர் எக்டருக்கு 800 கிராம் என்ற அளவில் ஐசோபுரோட்டுரான் என்ற களைக்கொல்லி மருந்தினை தெளிக்கவேண்டும். விதைத்த 35 நாட்களுக்குப் பின்னர் கைக்களை எடுக்கவேண்டும். களைக்கொல்லியை தெளிக்கவில்லையெனில் விதைத்த 20வது மற்றும் 35வது நாட்களில் இரண்டு கைக்களை எடுக்கவேண்டும்.

நீர் நிர்வாகம்

  • நிலத்தின் தன்மை மற்றும் மழையைப் பொறுத்து நான்கு முதல் ஆறு முறை நீர் கட்டவேண்டும். கோதுமை பயிருக்கு கீழ்க்கண்ட 5 நிலைகளில் நீர்ப்பாசனம் தருவது அவசியம்.

நீர் கட்டவேண்டிய முக்கிய நிலைகள்

I விதைத்த பின்  
II வேர் பிடிக்கும் நிலை 15-20 நாட்கள்
III தூர் பிடித்தல் 35-40 நாட்கள்
IV பூக்கும் நிலை 50-55 நாட்கள்
V மணி பிடிக்கும் நிலை 70-75 நாட்கள்
  • கோதுமையை பொறுத்தவரை வேர்பிடிக்கும் மற்றும் பூக்கும் தருணத்தில் நீர் கட்டுதல் மிக அவசியமாகும். முளைவிடும் தருணத்தில் தண்ணீர் தேங்கக்கூடாது.

மேலுரம் இடுதல்

  • வேர் பிடிக்கும் நிலையில் (15-20 நாட்கள்) மீதியுள்ள பாதியளவு தழைச்சத்தினை மேலுரமாக இடவேண்டும்.

அறுவடை

  • தானியங்கள் முற்றிய பிறகு மற்றும் தட்டை காய்ந்த பின்னர் அறுவடை செய்யவேண்டும். தானியங்களை பிரித்து தூற்றவேண்டும். செலவினை குறைக்க கதிர் அருப்பானை தானியங்களை பிரிக்க மற்றம் சுத்தம் செய்ய உபயோகிக்கலாம்.

விதை நேர்த்தி :

பின்வரும் பூஞ்சானக் கொல்லியில் ஏதேனும் ஒன்றை கொண்டு விதை நேர்த்தி செய்யவும்

  • கார்பன்டாசிம் @ 2 கிராம் / கிலோ
  • திரம் @ 2 கிராம் / கிலோ
  • கார்பாக்ஸின் @ 2 கிராம் / கிலோ

கோதுமையில் அறுவடை பின்சார் தொழில்நுட்பம்

  • கோதுமை மனிதன் உட்கொள்ளும் தானிய வகைகளில் முக்கியமான இடம் வகிக்கின்றது. கோதுமை மாவு சப்பாத்தி,ரொட்டி மற்றும் அடுமனைப்பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. கோதுமை டிரிட்டிகம் இனத்தைச் சேர்ந்தது 30,000க்கும் மேற்பட்ட இன வகைகளைக் கொண்டது. கோதுமை வகைகளில் ரொட்டிக்கு டி.சட்டைவம், மாக்ரோனி (பிழியப்படும் பதார்த்தத்தில்) டி.டியூரம் வகையும் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு....

 
Fodder Cholam