தெளிப்பு நீர்ப் பாசனம்
செயல்கள் : நிலப்பரப்பிற்கு மேலே நீரை மழைபெய்வது போல் பம்ப் உதவியுடன் தெளிக்க செய்கிறது
தனிக்குறிப்பீடு
- குறைவான அழுத்தம் (1.0 கிலோ / செ.மீ2 ) ஒரு தெளிப்பானை செயல்படுத்த தேவைப்படுகிறது. ஒரு தெளிப்பான் மூலம் 12 மீ சுற்று வட்டாரம் வரை தெளிக்கலாம்
- 4 – 5 கிலோ / செ.மீ2 அழுத்தம், 4 தெளிப்பானை ஒரே நேரத்தில் பயன்படுத்த தேவைப்படுகிறது
- காற்றின் வேகம் 15 கிலோ மீட்டர் / மணி குறைவாக இருக்கும்போது செயல்படுத்துவது எளிதாகிறது. இதனால் நீர் இழப்பைத் தடுக்கலாம்
- அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் தெளிப்பானைப் பயன்படுத்துவதால் ஆவியாகுதல் இழப்பைத் தடுக்கலாம்
விலை : தோராயமாக ரூ. 3000 – 4000 / ஹெக்டேர்
சிறப்பியல்புகள்
- மலைப்பகுதிகளில் மேடு பள்ளம் இல்லாத பகுதிகளுக்கு ஏற்றது
- மலைத் தோட்டப் பயிர்களான தேயிலை, காபி மற்றும் இதரப் பயிர்களுக்கு ஏற்றது
- நிலக்கடலை, பருத்தி, முன்பே பூ உதிராத பயிர்களுக்கு ஏற்றது
- பாரம்பரிய பாசனத்தை விட 30 – 40 % செலவு குறைகிறது
தெளிப்பு நீர்ப் பாசனத்தில் பயிர்களுக்கான நீர் தேவை
பயிர் |
நீர் உபயோகம் (மி.மீ) |
நீர் சேமிப்பு |
நீர் பயன்பாடு கி.எக்.மி.மீ |
நிலக்கடலை |
390 |
24.7 |
5.13 |
பருத்தி |
308 |
505 |
9.8 |
சோயா |
380 |
50.5 |
4.77 |
உளுந்து |
140 |
50.0 |
8.82 |
5. பொதுவான பிரச்சனைகள் மற்றும் வழிமுறைகள்
- தெளிப்பு நீர்ப்பசானம் அமைக்க ஆரம்ப செலவுகள் அதிகம், எனினும் இந்த அமைப்பு குறைந்தது 10 ஆண்டுகள் வரை நன்கு பயன்படக் கூடியவை
- நம் நாட்டில் பெரும்பான்மையான விவசாயிகள் சிறு மற்றும் குறுநிலங்களையே கொண்டுள்ளனர். இதற்கு பல விவசாயிகள் ஒரு குழுவாக இணைந்து அமைத்தால் செலவை குறைக்கலாம்
- தெளிப்பான் ஒன்று 12 மீ வரை நீர் தெளிக்கக் கூடியது. இதற்கு 1 கி.கி /ஒரு சதுர செ.மீ. அழுத்தம் தேவைப்படுகிறது.
- காற்று அதிகமாக வீசும்போது தெளிப்பானின் திசை மற்றும் வேகம் மாற வாய்ப்புள்ளது. காற்று வீசும் சமயங்களில் அடிக்கடி மேற்பார்வையிடும்போது இதனைச் சரி செய்து கொள்ளலாம்.
- விவசாயிகளுக்கு தெளிப்பான மற்றும் அதன் உபயோக முறைகளைப் பற்றி சரியான பயிற்சி அளிக்க வேண்டும்
|