அடுக்குநீர்ப்பாசனம்
அடுக்குநீர்ப்பாசனம்
அதிக அழுத்த பாசன முறைகளான சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர்ப் பாசன முறைகள் இருந்தாலும் பாரம்பரிய முறையான மண்ணின் மேற்பரப்பில் பாசனம் செய்யும் முறை இன்றும் வழக்கத்தில் உள்ளது. இதனுடைய எளிமையான அமைப்பு முறை, அமைப்பதற்கான குறைந்த செலவு, மற்றும் செயல்படுத்தும் செலவு குறைவு என்பதாலும் இந்த முறை விவசாயிகளால் பின்பற்றப்பட்டு வருகின்றது. சிறிய வரிசை பள்ளம் மற்றும் தடுப்புப்பாத்தி அமைப்பு முறைகள் (தமிழ்நாட்டில் முக்கியமான பாசனமுறையாகும்) அல்லது செவ்வக வடிவ வயல்களில் குறுக்கு நெடுக்கு வரப்பு அமைத்து, வாய்க்கால் வழியே நீர்ப்பாய்ச்சப்படுகிறது. இந்த முறையில் நீர்ப் பாய்ச்சுவதற்கு நெடு நேரம் எடுத்துக் கொள்கிறது மற்றும் பாசன பயன்பாடு 55 - 65% அதிக கசிவு, ஆழமான துளை வழி கசிவு மற்றும் ஓடுநீர் இழப்பு (35 - 45%) குறைகிறது. இது மட்டுமல்லாமல் மேடு பள்ளம் உடைய குறுக்கு நெடுக்கு அமைப்பு முறையில் 15 - 25% நீர் இழப்பு ஏற்படுகிறது. இதைக் குறைப்பதற்கு அதிக நீர்ப்பாசனம் செய்வதைத் தடுப்பதற்கும் புதிய முறையாக அலைநீர் பாசனம் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் அதிக பரிசோதனைகள் செய்து 1992 – 95 ல் அதிக நீர் விசையியல் ஆய்வு மற்றும் பயிருக்கு ஓத்துப் போகிறதா என்றும் ஆய்வு செய்து இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
பண்புகள்
அடுக்கு நீர்ப்பாசனம் என்பது பார் பிடித்த வயல்களில் பாத்திகளின் வழியே நீர்ப்பாய்ச்சல் செய்வது ஆகும். இம்முறை நன்கு வரையறுக்கப்பட்ட ( 25மீ லிருந்து 200 மீ வரை) மடை அடைப்பு மற்றும் திறப்பு கொண்டு செயல்படுத்தப்படுகிறது. இம்முறையில் பாசனக் கால்வாயிலிருந்து நீரானது பிரதான பாத்தியினுள் பாய்கிறது. பிரதான பாத்தியிலிருந்து செல்லும் நீளமான பாத்தியினுள் செல்லும் இவ்வாறு செல்லும் நீரானது பாரின் மீது வளரும் பயிரின் வேர்களுக்கு எளிதில் உறிஞ்சக் கிடைக்கிறது. பாத்தியின் கடைக்கோடியில் 30-50 சதம் தண்ணீரே சென்று சேருகிறது. எனினும் இம்முறை சிறந்ததாகக் கருதப்படுகிறது. இம்முறையில் 80-85 சதவீத நீர்ப்பயிர்களுக்குக் கிடைக்கிறது. நீரின் வேகம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் பார்களைக் குறுக்கு நெடுக்குமாக அமைத்தால் நீரின் வேகத்தை மட்டுப் படுத்தலாம். இதனால் 5 சதவீத நீரின் இழப்பு குறைக்கப்படுகிறது. இம்முறை குறிப்பிட்ட கால இடைவெளியில் சுழற்சி முறையில் பின்பற்றப்படுகிறது.
அடுக்கு நீர் அலைப்பாசனம் பற்றி வேளாண் பல்கலைக்கழகத்தின் மதிப்பீடு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பகுதி தானியங்கி மற்றும் தானியங்கி அடுக்கு நீர்ப் பாசனக் கருவிகளை அமைத்துள்ளது. இம்முறையில் ஒரு பாத்திக்கு நிமிடத்திற்கு 30 லிருந்து 120 லிட்டரும், மடை அடைப்பு மற்றும் திறப்பு 5 லிருந்து 30 நிமிடத்திற்கு ஒரு முறை, சுழற்சி வீதம் (0.25-0.66), பாத்தித் துகள்கள் (0.1-0.6) பாத்தி (30-120 செ.மீ.) , பாத்தியின் நீளம் (50-200 மீ) என்ற அளவிற்கு வசதிக்கேற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
மேலும் நீர்த் தேவைப்படும் காலத்தையும், நீர்ப்பரவல் தன்மையையும் கண்டறியும் ஒரு மாதிரியை (செந்தில்வேல் 1995) உருவாக்கியுள்ளனர்
மண் எற்புத்தன்மை : மணற்பாங்கான வண்டல் மண் மற்றும் வண்டல் மண்
பரிசோதித்த பயிர்கள் : மக்காச் சோளம், சூரியகாந்தி மற்றும் சோளம்
நீர் சேமிப்பு : 25-40%
நில சேமிப்பு : 15-25%
குறைபாடுகள்
அடுக்கு நீர் பாய்ச்சல் முறைகள் நல்ல களிமண் அல்லது மணற்பாங்கான நிலங்களில் அதிக வேறுபாடுகள் தோன்றும். அதோடு இம்முறை இந்தரியால் இன்னும் ஆரம்ப அளவிலேயே இருக்கிறது. விரிவாக்கப் பணிகள் மூலம் பிரபலப்படுத்தப்படவேண்டியது அவசியம் ஆகும். |