Agriculture
தாவர ஊட்டச்சத்து :: வரலாற்றுச்சுவடுகள்

19ஆம் நூற்றாண்டு ‘தியோடர் தி சாஸர்’ என்பவர் தாவரங்கள் சுவாசித்திலின் போது ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகின்றன என்று கூறினார். மேலும் தாவரங்கள் கார்பன்-டை-ஆக்ஸைடை சூரிய ஒளியின் முன்னிலையில் எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன என்றும் அவர் கண்டறிந்தார். கார்பன்-டை-ஆக்ஸைடு இல்லாத சூழ்நிலையில் தாவரங்கள் இறந்துவிடுகின்றன என்றும் விளக்கினார். தாவரங்களுக்கு ஒரு குறிப்பிட்ட மிகக் குறைவான சத்துக்களையே மண் வழங்குகிறது என்றும் அவர் விளக்கமளித்தார். அதாவது, கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் நைட்ரஜன் போன்ற சத்துக்கள் மண்ணிலிருந்து எடுக்கப்படுகின்றன என்றும் பொட்டாசியத்தை தாவரம் தானாகவே உற்பத்தி செய்கிறது என்றும் அவர் கூறினார். மேலும் தாவரங்கள் மண்ணிலுள்ள தாதுப்பொருட்களை விட தண்ணீரை வேகமாக உறிஞ்சுகின்றன என்றும் பதிலளித்தார்.

சர் ஹம்பிர் டேவி என்பவர் ‘வேளாண் இரசாயனத்தில் தனிமங்கள்’ (1813) என்ற புத்தகத்தில் தாவரங்கள் காற்றிலிருந்து கார்பனை வேரின் வழியாக எடுத்துக்கொள்கின்றன என்று குறிப்பிட்டுள்ளனர். ‘ஜீன் பேப்டிஸ் பேசிங்கால்ட்’ என்ற பிரெஞ்சு விஞ்ஞானி (1802-1882) தாவர தாதுப்பொருட்கள் மழைநீர், மண் மற்றும் காற்றின் மூலம் கிடைக்கின்றன என்று கருதியுள்ளார்
ஜஸ்டஸ் வான் லீபெக் (1803-1873) என்ற ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இரசாயன வல்லுனர், தாவரங்கள் கார்பனை, கார்பன்-டை-ஆக்ஸைடு தவிர பிற காரணிகளிலிருந்தும் பெற்றுக்கொள்கிறது எனக் கூறினார்.

  • தாவரங்கள் வளிமண்டல கார்பன்-டை-ஆக்ஸைடிலிருந்து கார்பனை பெற்றுக்கொள்கிறது.
  • ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் நீரிலிருந்து கிடைக்கிறது
  • பயிர் வேதி வினையியல் மாற்றங்களினால் உருவாகும் அமிலங்களை சமன்செய்வதற்கு காரவகை தாதுபொருட்கள் தேவைப்படுகின்றன.
  • விதை முளைத்தலுக்கு பாஸ்பரஸ் தேவைப்படுகிறது
  • தாவரங்கள் அனைத்து சத்துக்களையும் மண்ணிலிருந்து உறிஞ்ச பின்பு தேவையில்லாதவற்றை வேரின் மூலம் வெளியே தள்ளுகிறது

1843 ஆம் ஆண்டு ஜெ.பி.லவெஸ் மற்றும் ஜெ.எச்.ஹில்பெர்ட் ஆகியோர்கள் இங்கிலாந்திலுள்ள ரோதம்ஸ்டெட் என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவாக சில தகவல்களைத் தெரிவித்தனர்

  • பயிர்களுக்கு பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்றவை தேவைப்படுகிறது
  • பயறுவகை அல்லாத பயிர்களுக்கு நைட்ரஜன் தேவைப்படுகிறது
  • இரசாயன உரங்களின் மூலம் மண்ணின் வளத்தை சில ஆண்டுகள் பராமரிக்கலாம்
  • பிரெஞ் பாக்டீரிய வல்லுநர்களான ஸ்கோலோசிங் மற்றும் முஞ்(1878) ஆகியோரின் கூற்றுப்படி நைட்ரேட்டின் உற்பத்தி, குளோரோபார்ம் சேர்ப்பதன் மூலம் தடுக்கப்படுகிறது. மறுபடியும் உற்பத்தியை தொடங்க சிறதளவு கழிவுநீரை சேர்க்க வேண்டும். எனவே பாக்டீரியாக்களின் செயல்திறன் காரணமாகவே நைட்ரஜனேற்ற வினை நிகழ்கிறது எனக் கூறினார்.

1886 ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இருவர் கூறியதாவது, சில பாக்டீரியாக்கள் பயறுவகைபயிர்களின் வேர்முடிச்சுகளில் காணப்படுகிறது என்றும் அவை வளிமண்டலத்திலுள்ள நைட்ரஜனை மாற்றி பயிருக்குப் பயன்படும் விதமாக மாற்றுகிறது. எம்.வி. பேரிங் என்ற விஞ்ஞானி பேசிலஸ் ரேடிகோலா என்ற நைட்ரஜனை நிலைநிறுத்தும் பாக்டீரியாவை தனித்துப்பிரித்தார்

 
 
Fodder Cholam