Agriculture
தாவர ஊட்டச்சத்து :: தாவர பொருளின் மாதிரி


மாதிரி நுட்பங்கள் பயிருக்கு பயிர் மாறுபடும். சில நேரங்களில், தானிய பயிர்களில் இலை மாதிரிகள் எடுக்கப்படுகின்றன. சில சமயங்களில், உதாரணமாக சர்க்கரைக் கிழங்கில் போரான் குறைபாடிருந்தால் வேர்கள் சோதனைக்காக எடுக்கப்படுகின்றன.

தாவர பொருளின் மாதிரி எடுக்கும்பொழுது மண்ணுடன் கலக்காமல் கவனமாக எடுக்க வேண்டும். பகுப்பாய்வு மேற்கொள்ளும் போது மண்ணுடன் கலந்து தாவரங்களை எடுத்தால் தவறான முடிவையே காட்டும். ஏனெனில் தாவரங்களைவிட மண்ணில் அதிகப்படியான தாதுக்கள் இருக்கும்.


பயிர்களின் அடையாளக் கூறெடுத்தல் அவசியமாகிறது. ஒரு பகுதியில் ஒன்று அல்லது இரண்டு தாவரங்களை மாதிரியாக எடுப்பது தவறு. குறிப்பிட்ட பகுதியில் 50 முதல் 100 தாவரங்களை மாதிரியாக எடுக்க வேண்டும்.  

விலை நிலத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் குறைபாடு அல்லது நச்சுத் தன்மை தென்பட்டால், நல்ல பகுதி மற்றும் பாதிக்கப்பட்ட பகுதி இரண்டையும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். இலைகள் அல்லது தாவரத்தின் மற்ற பாகங்கள், ஒரே வயதுடைய அல்லது ஒரே வளர்ச்சியுடைய தாவரங்களை ஒரே நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தாவர மாதிரிகளைக் கொண்டு செல்வதற்கு கொள்கலன்களைக் கொண்டு ஒன்றுடன் ஒன்று கலக்காமல் பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டும். டின்கள், மற்ற உலோக கொள்கலன் அல்லது காகித பைகளை உபயோகிக்க வேண்டும். சிறந்த கொள்கலன் சுத்தமான பாலித்தீன் பையாகும். தாவர மாதிரிகளை எடுத்தக்கொண்ட பிறகு, அடையாளம் ஒட்டப்பட்டு, பை சீல் செய்யப்பட்டு விரைவாக ஆய்வகத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும்.

இந்த தொழில்நுட்பத்திற்கு பின்னர் உள்ள அடிப்படை கொள்கை, தாவரங்களின் ஊட்டச்சத்து மண்ணில் உள்ள ஊட்டச்சத்தை பொறுத்து அமைகிறது. திசுக்களில் ஊட்டசத்து மதிப்பு அபாய நிலைக்கும் குறைந்தால் மண்ணில் தாவரஙகள் நன்கு வளர்ச்சியடைய போதூன ஊட்டசத்து இல்லாமல் பற்றாக்குறை உள்ளது என்று பொருள்.
தாவரத்தின் ஒவ்வொரு பாகத்திலும் ஒவ்வொரு மாதிரியான ஊட்டச்சத்து அளவு இருக்கும். தாவரத்தின் வளர்ச்சியைப் பொறுத்து ஊட்டசத்து அளவு மாறுபடும். எனவே, இலை மாதிரிகள் பகுப்பாய்வு உடல்சார் வயது அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும் அதாவது வளர்ச்சி நிலையில். காய்கறி பயிர்களுக்கான இலை மாதிரி நிலைகள் அட்டவணையில் வழங்கப்பட்டுள்ளது. மாதிரிகள் நோய்கள் மற்றும் பூச்சிகள் தாக்குதல் இல்லாமல் மற்றும் இயற்பியல் அல்லது வேதியியல் காயம் இல்லாமல் இருப்பது முக்கியமாகும். பழத்தின் அருகில் உள்ள இலைகளில் சோதனை மேற்கொள்ளக் கூடாது.

அட்டவணை : தாவர பகுப்பாய்வில் இலைகள் மற்றும் தாவர திசுக்களை சேகரிக்கும் செயல்முறை (Plank, 1979)

வளர்ச்சி நிலை தாவர மாதிரி பகுதி மாதிரிக்காக எடுக்கப்படும் தாவரங்களின் எண்ணிக்கை
கள பயிர்கள்
மக்காச்சோளம் *
நாற்று நிலை (30 செ.மீக்கும் குறைவாக)
தரை மேல் உள்ள அனைத்து பகுதிகளும் 20-30
ஆண் பூக்கள் பூப்பதற்கு முன்னால் முழு இலை பரப்பு 15-25
அல்லது    
ஆண் பூக்கள் மற்றும் பெண் பூக்கள் பூப்பதற்கு முன் முழு இலை பரப்பு கணு வரையில் 15-25
*ஆண் பூக்கள் பூப்பதற்கு முன்னால்
சோயாபீன்ஸ் அல்லது மற்ற பீன்ஸ் *
நாற்று நிலை (30 செ.மீக்கும் குறைவாக)
தரை மேல் உள்ள அனைத்து பகுதிகளும் 20-30
அல்லது    
பூக்கும் தருவாய் அல்லது அதற்கு முன்னதாக தாவரத்தின் மேல் உள்ள முழுமையாக வளர்ச்சியடைந்த இலைகள் 20-30
*நெற்று தோன்றிய பிறகு மாதிரிகள் எடுப்பது பரிந்துரைக்கப்படுவதில்லை
சிறு தானியங்கள் (அரிசி உட்பட) *
நாற்று நிலை (30 செ.மீக்கும் குறைவாக)
தரை மேல் உள்ள அனைத்து பகுதிகளும் 50-100
*நெற்று தோன்றிய பிறகு மாதிரிகள் எடுப்பது பரிந்துரைக்கப்படுவதில்லை
மேய்ச்சல் நிலம், அல்லது தீவன புற்கள்
விதை வருவதற்கு முன்பு அல்லது தரமான தீவனப்பயிர்
நான்கு மேலே உள்ள இலைகள் 40-50
குதிரைமசால்
1/10 மலர்ந்த நிலையில் அல்லது அதற்கு முன்னதாக
முதிர்ந்த இலை 40-50
தீவனப்புல் மற்றும் பிற பயிர்கள்
மலரும் முன்
முதிர்ந்த இலை தாவரத்தின் மேலிருந்து 1/3 40-50
பருத்தி
முதல் முறை மலரும்பொழுது அல்லது அதற்கு முன்னதாக
முக்கிய தண்டின் இளம் முழு வளர்ச்சி பெற்ற இலைகள் 30-40
புகையிலை
மலரும் முன்
மேலேயுள்ள முழுமையாக வளர்ந்த இலை பரப்பு 8-12
சோளம்
மலர்ந்த நிலை அல்லது அதற்கு முன்னதாக
முக்கிய தண்டின் முதிர்ந்த இலைகள் மற்றும் பக்கவாட்டு கிளையிலுள்ள விதையிலை 15-25
வேர்கடலை
மலர்ந்த நிலை அல்லது அதற்கு முன்னதாக
முக்கிய தண்டின் முதிர்ந்த இலைகள் மற்றும் பக்கவாட்டு கிளையிலுள்ள விதையிலை 40-50
உருளைக்கிழங்கு
வளரும் நுனியில் இருந்து ஆறாவது அல்லது நான்காம் இலை
ஆரம்ப வளர்ச்சி (நடவு செய்த 35-40 நாட்களுக்கு பின்) 20-30
தக்காளி
வளரும் நுனியில் இருந்து ஆறாவது அல்லது நான்காம் இலை
மலர்ந்தவுடன் 20-25
மிளகாய் மற்றும் இனிப்பு மிளகு
நன்கு வளர்ந்த இளம் இலைகள்
காய் காய்க்கும் பருவம் 20-25
காலிஃபிளவர்
இளம் முதிர்ந்த வெளி இலைகள்
பூவின் மொட்டு பருவம் வரை 10-20
ப்ரோக்கோலி
இளம் முதிர்ந்த வெளி இலைகள்
முதல் மொட்டு உருவாகும் தருணம் 10-20
கிளை கோசு
இளம் முதிர்ந்த வெளி இலைகள்
மத்திய வளர்ச்சி 10-20
தர்பூசணி, முலாம் பழம், வெள்ளரிக்காய், பூசணிக்காய் முதலியன
தாவரத்தின் அடிப்பகுதி அல்லது முக்கிய தண்டின் முதிர்ந்த இலைகள்
காய் பிடிக்கும் முன் ஆரம்ப வளர்ச்சி 20-30
பீன்ஸ் (பிரஞ்சு பீன், காராமணி, மா அவரை, அவரை முதலியன)
தாவரத்தின் மேல் பகுதியில் முழுமையாக வளர்ச்சியடைந்த இலைகள்
பூக்க ஆரம்பிக்கும் தருணம் 20-30
பட்டாணி
தாவரத்தின் மேலிருந்து முன்றாவது கணு இலைகள்
பூக்க ஆரம்பிக்கும் தருணம் 30-60
வேர் பயிர்கள் (கேரட், முள்ளங்கி, பீட்ரூட், டர்னிப்)
தாவரத்தின் மேலிருந்து முன்றாவது கணு இலைகள்
பூக்க ஆரம்பிக்கும் தருணம் 20-30
பூண்டுப் பயிர்கள் (வெங்காயம், பூண்டு முதலியன)
நன்கு வளர்ச்சியடைந்த தாவரத்தின் மையத்தில் இளம் இலைகள்
பூண்டு உருவாவதற்கு முன்னர் 20-30
சிவரிக்கீரை
இளம் முழுமையான நீள் இலை காம்பு
மத்திய வளர்ச்சி (30-35 செ.மீ. உயரம் வரை) 10-20
கீரை (இலை வகை)
மேலுறை இலை மையநரம்பு
பூக்கும் பருவம் 30-40
கீரை (இலை வகை)
இளம் முதிர்ந்த இலை
மத்திய வளர்ச்சி 30-40
இலை கீரைகள் (பசளைக் கீரை முதலியன)
இளம் முதிர்ந்த இலை
மத்திய வளர்ச்சி 30-40
சர்க்கரை வள்ளிக்கிழங்கு
வளரும் நுனியிலிருந்து ஆறில் நான்காம் இலை
வேர் விரிவாக்கம் அடைவதற்கு முன்னதாக 20-30
அஸ்பாரகஸ்
மேலுள்ள 10 செ.மீ புதிய கிளை
மத்திய வளர்ச்சியில் உள்ள கிளை 20-30
மக்காச்சோளம்
கணுவில் உள்ள முழு இலை
மகரந்தக் குஞ்சம் 20-30
பழங்கள் மற்றும் கொட்டைகள்
ஆப்பிள், பாதாமி, பாதாம், ப்ரூனே, குழிப்பேரி, பேரிக்காய், செர்ரி    
இடைப்பருவம் இளம் முழுமையாக விரிவடைந்த காம்பு இல்லாத இலைகள் 50-75
Pecan    
மலர்ந்த 6 முதல் 8 வாரங்களில் முனையத்தில் உள்ள இலைதளிர்கள் 30-45
வால்நட்
மலர்ந்த 6 முதல் 8 வாரங்களில்
முதிர்ந்த தளிர்களிலிருந்த மத்திய இலைகள் 30-35
திராட்சை
மலர்ந்து முடியும் காலம்
பழக்கொத்திற்கு அருகில் உள்ள இலைக்காம்பு 60-100
ரேஸ்ப்பெரி
இடைப்பருவம்
பக்கவாட்டு இளம் முதிர் இலைகள் (அ) முதன்மை தண்டு (இலை தண்டு இல்லாமல்) 20-40
அலங்கால மலர்கள்
அலங்கார மரங்கள்
தற்போதைய ஆண்டு வளர்ச்சி முழுமையாக வளர்ந்த இலைகள் (காம்பு இல்லாமல்) 30-100
அலங்கார செடிகள்
தற்போதைய ஆண்டு வளர்ச்சி
முழுமையாக வளர்ந்த இலைகள் 30-100
புல் தரை
இயல்பாக வளரும் பருவம்
இலைப்பரப்புகள். மண் அல்லது வேறு பொருட்களுடன் கலக்காமல் தவிர்க்க பிடிகளை உபயோகித்தல் ½ லிட்டர் பொருள்
ரோஜாக்கள்
மலர் உற்பத்தி தருணம்
பூக்கும் தண்டு இலைகள், இலைக்காம்பு இல்லாமல் 20-30
சாமந்தி
பூக்கும் தருணம் அல்லது அதற்கு முன்னதாக
பூக்கும் தண்டின் மேலுள்ள இலைகள் 20-30
கார்னேஷன்
கிள்ளப்படாத தாவரங்கள்
தாவரத்தின் அடிப்புறத்தில் இருந்து 5 அல்லது 6 இலை ஜோடி 20-30
கிள்ளும் தாவரங்கள் முதன்மை பக்கவாட்டிலுள்ள மேல் இருந்து 5 வது அல்லது 6 இலை ஜோடிகள் 20-30
பாய்ன்செட்டியாஸ்
பூக்கும் தருணம் அல்லது அதற்கு முன்னதாக
சமீபத்தில், முதிர்ந்த முழுமையாக விரிவான இலை பரப்பு 15-20

தாவர மாதிரிகள் எடுத்து ஊட்டச்சத்து உள்ளடக்கம் பகுப்பாய்வு

  1. அஞ்சல் கருவிகள் : பெரும்பாலான ஆய்வகங்கள் தாவர ஆய்வில் அஞ்சல் கருவிகள் கொண்டுள்ளன. மாதிரி வழிமுறைகள் மற்றும் சமர்ப்பிக்கும் மாதிரிகள் குறிப்பாக பின்பற்ற வேண்டும்.
  2. எதை மாதிரி செய்வது : இலை மற்றும் தாவர திசு சேகரிக்கும் பகுப்பாய்வு மாதிரி நடைமுறைகள் அட்டவணை 3.4 ல் காட்டப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பயிருக்கு குறிப்பிட்ட மாதிரி வழிமுறைகள் கொடுக்கப்படாவிட்டால், பொதுவான வழிமுறையாக அண்மையில் முதிர்ந்த இலைகளை  மாதிரிகளாக எடுத்துக்கொள்ளலாம். மாதிரி வளர்ச்சி பரிந்துரை நிலை சற்று முன்னதாக பல தாவரங்கள் இனப்பெருக்க நிலை தொடக்கமாக உள்ளது. வேர் பகுதியானது தாவரத்திலிருந்து நீக்கப்படக்கூடாது. அதே நேரத்தில், அதே பகுதியில் இருந்து மண் மாதிரி எடுக்க வேண்டும்.
  3. ஒப்பீடு மாதிரிகள்: ஒரு பகுதியில் குறைபாடு அறியப்பட்டால், அந்த பகுதியின் பாதிக்கப்பட்ட தாவரத்தின் மாதிரி மற்றும் அருகாமையில் உள்ள இயல்பான தாவரத்தின் மாதிரி இரண்டையும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பகுதியில் இருந்து ஒரு மண் மாதிரியும் எடுக்க வேண்டும்.
  4. மாசுக்களை நீக்க சலவை: தூசு நிறைந்த தாவரங்கள் அகற்றப்பட வேண்டும். ஆனால், தற்போது தூசு இருந்தால் சுத்தமான துணியைக் கொண்டு துடைப்பது போதுமானது. இல்லை என்றால் பொருள் சுத்தமாகும் வரை ஓடும் தண்ணீரில் கழுவலாம்.
  5. எதை மாதிரியாக எடுக்கக்கூடாது :
  6. நோயுற்ற அல்லது இறந்த தாவரப் பொருள், பூச்சிகளால் சேதமடைந்தவை.
  7. தாவரங்கள் குளிர், வெப்பம், ஈரப்பதம் பற்றாக்குறை அல்லது அதிகப்படியானதால் பாதிக்கப்பட்டவை.
  8. வேர்கள் நூற்புழுக்கள், பூச்சிகள் அல்லது நோயால் பாதிக்கப்பட்டவை
  9. கேள்வித்தாள் : இவை மாதிரி மற்றும் ஆய்வகத்திற்கும் இடையேயான தொடர்பு ஆகும்.

கேள்வித்தாளின் அனைத்து பகுதிகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். மேலும் மாதிரியெடுப்பவர் முறையாக திருத்தியும் ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்க வேண்டும்.

  1. தாவர திசுவை பேக் செய்தல் : ஓரளவு காற்று வெளியேற்றப்பட்ட சுத்தமான காகித பை அல்லது உறைகளில் பேக் செய்ய வேண்டும். பாலித்தீன் பை அல்லது இறுக்கமாக சீல் வைக்கப்பட்ட கொள்கலன்களை உபயோகிக்கக் கூடாது. தாவரம் வளரும் சூழல் மற்றும் மண் ஆகியவை அவற்றின் ஊட்டச்சத்து நிலையை பாதிக்கும். பரிசோதனை முடிவுகளை பாதிக்கும் காரணிகள்: முதலாவது பொது செயல்திறன் மற்றும் செடியின் வீரியம், இரண்டாவது தாவரத்தின் மற்ற சத்துக்களின் அளவு, மூன்றாவது பூச்சிகளினால் சேதம், நோய்கள் மற்றும் வேறு தொந்தரவுகள், நான்காவது சோதனை நேரத்தில் காலநிலை மற்றும் ஐந்தாவது சோதனை செய்யப்படும் நாள். தாவர வல்லுநர் தாவர வினையியலில் தேர்ந்தவராக இருக்க வேண்டும் மற்றும் தாவரங்களை மிக பயனுள்ளதாக பயன்படுத்த வேண்டும் – திசு சோதனைகள்
 
Last Update:September 2014
 
Fodder Cholam