Agriculture
உர நிர்வாகம்

தீவன தட்டைப்பயறு

தொழு உரமிடுதல்

எக்டருக்கு 12.5 டன் தொழு உரம் அல்லது கம்போஸ்ட் இடவும்.

உரமிடுதல்

  1. மண் பரிசோதனையின் படி உரமிடவும், மண் பரிசோதனை செய்யாவிடில் எக்டருக்கு 25 :40 :20 கிலோ தழை, மணி , சாம்பல் சத்து இடவும்.
  2. பாத்திகளில் பயிரிடுவதாக இருந்தால் 3 செ.மீ ஆழம் மற்றும் 30 செ.மீ இடைவெளியில் கோடுகள் போட்டு 5 செ.மீ ஆழத்தில் உரக் கலவையை இட வேண்டும். விதைப்புக்கு பின் மேற்புறத்தை 2 செ.மீக்கு மூட வேண்டும்.
  3. பார்களில் பயிரிடுவதாக இருந்தால், பார்களின் இருபுறமும் கோடுகள் போட்டு பாத்திகளில் உரக் கலவையை இடுவதைப் போலவே இட வேண்டும்.

விதைப்பு

3 பாக்கட்டுகள் (600 கி) ரைசோபியம் உயிர்உரத்தை அரிசிக் கஞ்சியில் கலந்து விதை நேர்த்தி செய்யவும்.

Updated on : December 2013

 
Fodder Cholam