Agriculture
உர நிர்வாகம்

பச்சைப்பயிறு

விதை நேர்த்தி

ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்டிபன்டாசிம் அல்லது திரம் அல்லது 4 கிராம் ட்ரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும். விதைப்பு நஞ்சையில் விதைகளை 30 × 10 செ.மீ. இடைவெளியில் ஊன்ற வேண்டும். நெல் தரிசில் பயிரிடுவதாக இருந்தால் விதைகளை நெல் அறுவடைக்கு 5 முதல் 10 நாட்கள் இருக்கும்போது சீராக நிலத்தில் தெளிக்க வேண்டும். அப்போது வயலில் தகுந்த ஈரம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

மானாவாரிப்பயிர் 12.5 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து மற்றும் 12.5 கிலோ சாம்பல் சத்து மற்றும் 10 கிலோ கந்தகச் சத்து இடவேண்டும். இறவைப்பயிர் 25 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து, 25 கிலோ சாம்பல் சத்து மற்றும் 20 கிலோ கந்தகச்சத்து  தரக்கூடிய உரங்களை இட வேண்டும். அடியுரமாக 25 கிலோ ஜிங்க் சல்பேட் இட வேண்டும்.

பயிர் ஒரு எக்டருக்கு இடவேண்டிய சத்துக்கள் (கிலோ)
தழை மணி சாம்பல் கந்தகம்
பச்சைப்பயிறு மானாவாரி 12.5 25 12.5 10
இறவை 25 50 25 20

குறிப்பு:

  • மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட் உரம் மூலம் இடவில்லை எனில் ஜிப்சம் மூலமாக கந்தகத்தை இடவும்.
  • பாசன நிலையில் மண்ணில் 25 கிலோ துத்தநாக சல்பேட்/எக்டர் அளிக்கவும்.
  • தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நுன்உரக் கலவையை எக்டருக்கு 5 கிலோ ஊட்டமேற்றிய தொழுவுரமாக அளிக்கவும். (ஊட்டமேற்றிய தொழுவுரம் தயாரிக்க 1:10 என்ற விகிதத்தில் நுண்உரக் கலவை மற்றும் தொழுவுரத்தை சேர்த்து தகுந்த ஈரப்பதத்தில்   ஒரு மாதம் நிழலில் உலர்த்தவும்)

புதிய டெல்டா பகுதி, தஞ்சாவூரில் பாசன பச்சைப்பயிரில் பன்முக பூக்கும் தொழில்நுட்பம்

அதிக மகசூல் மற்றும் வருமானம் பெற எக்டருக்கு 25:50:25:20 கிலோ NPKS + எக்டருக்கு 25 கிலோ தழைச்சத்தை 3 சம பாகங்களாக பிரித்து விதைத்த 30,45 மற்றும் 60ம் நாளில் அளிக்கவும் + 2% டி.ஏ.பி விதைத்த 45 மற்றும் 60ம் நாளில் தெளிக்க வேண்டும்.

பச்சை பயிரில் மகசூலை அதிகரிக்க 1% யூரியாவை இலைவழியாக தெளித்தல்

மகசூலை அதிகரிக்க வினையியல், உயிர் இயைபு வழி பண்புகள், இலைத் தெளிப்பாக யூரியா 1% விதைத்த 30 மற்றும் 45ம் நாளில் தெளிக்க பரிந்துரைக்கப்படுகிறது. டெல்டா பகுதிகளில் நெல் தரிசு பயறுகளுக்கு தற்போது பரிந்துரைக்கப்பட்ட 2% டி.ஏ.பி கரைசலை இலைவழித் தெளிக்கும் முறையைப் பயன்படுத்தலாம்.

பச்சைப் பயறு நுண்ணூட்டப் பொருள் கொண்டு சிக்கனமாக விதைநேர்த்தி செய்தல்

உயிர் உரங்கள், துத்தநாகம், மாலிப்டினம் மற்றும் கோபால்ட் போன்ற நுண்ணூட்டச்சத்துகள் முறையே ஒரு கிலோ விதைக்கு 4, 1, 0.5 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்யலாம்.

பன்முக பூக்கும் தொழில்நுட்பம்

பட்டுக்கோட்டை வட்டம், தஞ்சாவூர் மாவட்டத்தில் உளுந்து மற்றும் பச்சைப் பயிரின் சிறப்பு தொழில்நுட்பம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. வண்டல் மண், கரிம பொருள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. முன் கோடையில் பயிரிட்டால் மற்ற பயிர்களைப் போன்று உரங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. அதனுடன் கூடுதலாக நைட்ரஜன் 25 முதல் 30 கிலோ யூரியாவுடன் சேர்த்து கொடுக்கப்படுகிறது. பயறு வகை பயிர்கள் உறுதியற்ற வளர்ச்சி பண்புகளைக் கொண்டவை. விதைத்த 40-45ம் நாள் மேலுரமிடல் வேண்டும். பயிரின் 60-65ம் நாள் முதிர்ந்த காய்களுடன் காணப்படும். அடுத்த 20-25ம் நாள் இரண்டாம் முறை முதிர்ந்த காய்கள் காணப்படும். எனவே 100 நாட்களில் இரண்டு முறை அறுவடை செய்ய முடியும்.

நெல்- தரிசு

டைஅமோனியம் பாஸ்பேட்என்.ஏ.ஏ மற்றும் சாலிசிலிக் அமிலம் தெளித்தல்

  • என்.ஏ.ஏ 40 மிகி/லி மற்றும் சாலிசிலிக் அமிலம் 100 மிகி/லி பூக்கும் முன் இலைத் தெளிப்பாக அளிக்க வேண்டும் மற்றும் 15 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை அளிக்க வேண்டும்.
  • டி.ஏ.பி 20 கி/லி பூக்கும் தருணத்தில் இலைத் தெளிப்பாக அளிக்க வேண்டும் மற்றும் 15 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை அளிக்க வேண்டும்.

Updated on : December 2013

 
Fodder Cholam