Agriculture
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு | புகைப்படத் தொகுப்பு
இயற்கை வளங்கள் – மண்வளம்

மாற்றுமுறை மண் பரிசோதனைத் தொழில்நுட்பம்

நிதி உதவி: அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, புதுடெல்லி மற்றும் முருகப்பா குழுமம்.


கோட்பாடு: இம்முறையில் வடிதாளின் உதவியுடன் மண்சத்துகளை ஒளிவினை சேர்மத்துடன் வினைபுரிய செய்து பல வண்ண படம்/ உருவம் பெறப்படுகிறது. இப்படத்தின் பண்புகளைக் கொண்டு மண்ணின் சத்துக்கள் கண்டறியப்படுகிறது.

ஆய்வு முறை(0.5 மி.லி.) சில்வர் நைட்ரேட் கரைசல்
வட்டவடிவ வடிதாளில் உறிஞ்சு குழலை நுழைத்தல்
3 செ.மீ. அளவிற்கு சில்வர் நைட்ரேட்டை வடிதாளில் பரவச்செய்தல்
உறிஞ்சுகுழலை வடிதாளிலிருந்து வெளியெடுத்தல்
2 மணி நேரம் நிழலில் உலர வைத்தல்
புதிய உறிஞ்சுகுழலை உலர வைத்த வடிதாளில் நுழைத்தல்
சோதனை கரைசல் தயாரிப்பு(3 கிராம் மண்ணை சோடியம் ஹைட்ராக்ஸைடு கரைசலில் கரைத்தல்)
3 மி.லி. சோதனை கரைசலை வடிதாளில் 7 செ.மீ. அளவுக்கு பரவச்செய்தல்
உறிஞ்சு குழலை அகற்றியபின் 2 மணி நேரம் நிழலில் உலர்த்துதல்
தெளிவான உருவத்தைப்பெற 800 லக்ஸ் ஒளியின் கீழ் வைத்தல்
படத்தின்/ உருவத்தின் பண்புகளை அறிதல்
பரிசோதனை அறிக்கை பெறுதல்

துள்ளியத்தன்மை
இந்தப்புதிய தொழில்நுட்பமானது வழக்கமான ஆய்வு(வேதியியல் முறை) முறைகளுடன் ஒப்பிடும் பொழுது தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து, கால்சியம், மெக்னீசியம், சோடியம், இரும்பு, மேங்கனீஸ் மற்றும் தாமிரம் ஆகிய சத்துக்களின் நிலை 90% ஏற்றுக்கொள்ளும் வகையில் உள்ளது.

தொழில் நுட்பத்திற்கான தொகை:
  • ஆய்வக உள் கட்டமைப்பு: ரூ.2,50,000
  • தொழில்நுட்ப கட்டணங்கள்: (மாறுதலுக்குட்பட்டது)
  • மொத்த தொகை: (மாறுதலுக்குட்பட்டது)
  • ஆய்விற்கான கட்டணம்/மண் மாதிரி:ரூ.150
தொழில்நுட்ப மேம்பாட்டில் உதவி:
அ.மு.மு.முருகப்பா செட்டியார் ஆராய்ச்சி மையம், சென்னை
இந்திய தொழில்நுட்ப நிறுவனம் –சென்னை மற்றும் முருகப்பா குழுமம்
044-22430937

 

 

 
Fodder Cholam