| |
வேளாண் துறை :: அலுவலக அமைப்பு
|
|
நிர்வாக அமைப்பு: மாநில அளவிலான அமைப்பு: வேளாண்மைதுறை இயக்குனர், வேளாண்மைத்துறையின் தலைமை அலுவலராக இருப்பார் மற்றும் கீழ்கண்ட உயர் அதிகாரிகள் வேளாண்மைதுறை இயக்குனருக்கு உதவி புரிவார்கள்.
மேலும் இயக்குனரகத்தின் கீழ், தானியங்கள், பருத்தி மற்றும் கரும்பு மாநில விதை பண்ணை, பருப்பு வகைகள், பயிற்சிகள், எண்ணெய்வித்துக்கள் மற்றும் ஆய்வுகள் என ஏழு இணை இயக்குனர்கள் உள்ளனர். கொள்கைகள், திட்டமிடல் மற்றும் மேலாண்மை, விரிவாக்கம், பயிர்பாதுகாப்பு, உரங்கள், கிராமபுற சமூகவியல், புள்ளிவிவரங்கள் மற்றும் இரண்டு துணை இயக்குனர்கள் (நிர்வாகம்) என மொத்தம் எட்டு துணை இயக்குனர்கள் தலைமையகத்தில் உள்ளனர். மாவட்ட அளவிலான அமைப்பு: வேளாண் துறையின் இணை இயக்குனர், மாவட்டங்கள் அளவிலான அனைத்து வேளாண்துறையின் செயல்பாடுகளையும் கவனித்துக்கொள்கின்றனர். இவருக்கு தொழில் நுட்ப வல்லுனர்கள் (பயிற்சி மற்றும் மேற்பார்வை) விவசாயம்) (பயிர்பாதுகாப்பு) மற்றும் (தகவல் மற்றும் பயிற்சி), உறுதுணையாக இருப்பர். ஒரு துணை வேளாண் இயக்குனர் (விதை) மற்றும் ஒரு துணை வேளாண் இயக்குனர் (Assistant Director of Agriculture) (தரக்கட்டுப்பாடு) ஆகிய இருவரும் மாவட்ட அளவிலான விதை உற்பத்தி, விநியோகம் மற்றும் விதைத் தரக்கட்டுப்பாடு ஆகியவற்றை கவனித்துக்கொள்கின்றனர். ஒரு துணை இயக்குனர் மாவட்ட அளவிலான எண்ணெய்வித்து செயல்பாடுகளை கவனித்துக்கொள்கின்றனர். மேலும் ஒரு துணை இயக்குனர் மாவட்ட அளவில் விவசாயிகளின் பயிற்சி மையங்களை கவனித்துக்கொள்கிறார். மேலும் ஒரு துணை இயக்குனர் மாவட்ட வட்ட ஆட்சியருடன் இணைந்து பிற விவசாய செயல்பாடுகளை கவனித்துக்கொள்கின்றனர். ஆய்வுக்கூடங்களின் செயல்பாடுகளை விவசாய வேதியாளர் மற்றும் துணை வேதியாளர்கள் கவனித்துக்கொள்கின்றனர். தொகுதி அளவிலான அமைப்பு: தொகுதி அளவிலான அணைத்து வேளாண் செயல்பாடுகளுக்கு, துணை வேளாண் இயக்குனர் கட்டுப்பாட்டில் வருகிறது. மேலும் வேளாண் ஊழியர்களுக்கான ஊதிய வழங்குதல் மற்றும் பிற நிதி வழங்குதல் அனைத்தும் துணை வேளாண் இயக்குனர் கீழ் வருகிறது. மேலும் அவரின் கீழ் ஒன்று முதல் மூன்று வேளாண் அலுவலர்கள் (பயிற்சி மற்றும் சுற்றுழா) ஒரு துணை விதை மேலாளர், இணை வேளாண் அலுவலர் மேலும் 10 துணை வேளாண் அலுவலர்கள் மற்றும் இரண்டு வயல் செயல்முறை விரிவுறையாளர்கள் வேலை செய்கின்றனர். |
|
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2013 | |