களை மேலாண்மை
|
||||||||||
இரசாயன முறை வேதிப்பொருட்களைப் பயன்படுத்தி களைகளை அழிப்பது களைக்கொல்லியாகும்.
மண் அளிப்பு: மண் மேற்பரப்பு அளிப்பு: களைக் கொல்லிகளை மண் மேற்பரப்பில் ஒரே மாதிரியாக தெளிக்க வேண்டும். குறைவான கரை திறன் உள்ளதால் அளிக்கப்பட்ட களைக் கொல்லிகள் மண்ணின் சில சென்டிமீட்டர் ஆழம் வரை மட்டுமே போகிறது. மேற்பரப்பில் முளைக்கும் களைகள் களைக்கொல்லிகளை உறிஞ்சுவதால் மடிகின்றன. மண் பரப்புதல்: சில களைக் கொல்லிகள் மண்ணின் மேற்பரப்பில் தெளித்து மண்ணுடன் பண்படுத்துதல் முறை அல்லது பாசன முறை மூலம் பரப்ப வேண்டும். ஆவியாகும் திறனுள்ள களைக் கொல்லிகளான அனிலைன் மற்றும் கார்பமேட் மண் அடிப்பரப்பில் அளித்தல்டு பல்லாண்டு களைகளான சைப்ரஸ் ரொட்டான்டஸ் மற்றும் சைனாடான் டாக்லைன் கட்டுப்படுத்த மண்ணின் அடிப்பரப்புக்கு போகக் கூடிய களைக் கொல்லியை தெளிக்க வேண்டும் வேரைச் சுற்றி அளித்தல்: களைக்கொல்லிகளை பயிரின் வேர்ப்பகுதியில் தெளிக்க வேண்டும். பயிர் வரிசையின் இடையில் உள்ள களைகளை இடை உழவு அல்லது வேரைச் சுற்றி அளிக்க வேண்டும். எங்கெல்லாம் ஆட்கள் அதிகம் தேவைப்படுகிறார்களோ அங்கு இந்த முறை பயன்படுகிறது. இடை உழவு செய்யும் இடங்களிலும் இந்த முறை பயன்படுகிறது. தழை அளிப்பு: பொதுவான அளிப்பு: முழு இலைப்பகுதியிலும் படுமாறு தெளிக்க வேண்டும். தேர்ந்தெடுத்த களைக்கொல்லிகள் இந்த முறையில் பயன்படுத்தப்படுகிறது. நேரடி அளிப்பு: களைக் கொல்லிகள் நேரடியாக பயிர்களின் இடையே உள்ள களைகளின் மீது பயிரின் தழைப் பகுதியைத் தவிர்த்து தெளிக்க வேண்டும்.பயிரின் மீது களைக் கொல்லி விழாதவாறு கவனத்துடன் தெளிக்க வேண்டும்.
Eg. பருத்தியில் கடைசிப்பருவத்தில் வரும் களைகளை தேர்ந்தெடுக்காத களைக் கொல்லிகளை நேரடியாகத் தெளிப்பதால் கட்டுப்படுத்தலாம். வேதியியல் முறையின் நன்மைகள்:
Eg. சைப்ரஸ் வகைகள் |
||||||||||
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2013 |