இயற்பியல் முறை
கை, விலங்குகள் அல்லது இயந்திர சக்தியை பயன்படுத்தி களைகளை அழிப்பதாகும். களை மற்றும் பயிர் நிலையைப் பொறுத்து ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளை கலந்து பயன்படுத்த வேண்டும்.
கையால் களை எடுத்தல்:
- சிறிய கை உபகரணத்தை பயன்படுத்தி களைகளை எடுக்க வேண்டும்
- கையால் களை எடுத்தலின் எண்ணிக்கை மற்றும் 2 களை எடுத்தலுக்கு நடுவில் உள்ள இடைவெளி ஆகிய இரண்டும் முக்கியமானது
- பயிர் வளர்ச்சி களை வளர்ச்சி பயிர்களை வளர்ச்சி நெருக்கடியான நிலையைப் பொறுத்து களை எடுத்தலின் எண்ணிக்கை அமைகிறது
- வயல் பயிர்களுக்கு 2 – 4 முறை களை எடுக்க வேண்டும்
- களையின் வளர்ச்சியை பொறுத்து அமையும் பொதுவாக 15 – 20 நாட்கள் இடைவெளி இருக்கும் ஒரு களை எடுத்தலுக்கும் இன்னொரு களை எடுத்தலுக்கும் இடையில் உள்ள இடைவெளி
கைக் கொத்து களை எடுத்தல்:
- களையின் வேர் உள்ள வரை கைக்கொத்துக் கொண்டு தோண்டி களையை முற்றிலுமாக அகற்ற வேண்டும்
- களைக் கொத்திய பின் திரும்பவும் களை வளர்ச்சியடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
- இந்த முறை இறவை மேட்டுப்பாத்தி பயிர்களான ராகி, கம்பு, வெங்காயம், ஆகிய பயிர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது
தோண்டுதல்:
- ஆழமாக மண்ணைத் தோண்டி களைகளை வேருடன் அகற்ற வேண்டும். பல வருடங்கள் உள்ள களைகளுக்கு இந்த முறை பயனுள்ளது. சைனடான் டேக்டைலானை இந்த முறையால் கட்டுப்படுத்தலாம்
புல் வெட்டுதல்:
- மண் மேற்பரப்பு வரை களை வெட்டுதலை புல் வெட்டுதலாகும்.
- பயிரில்லாத பகுதி தோட்டங்கள், புல்வெளிகளில் ஒரே மாதிரியான உயரம் வருவதற்காக பயன்படுத்தப்படுகிறது
- இதற்குப் பயன்படுத்தப்படும் கருவுிகள் பண்ணரிவாள், வீச்சுக் கத்தி, புல்வெளி வெட்டும் கருவி
அறுத்தல்:
- செடித்தூர் வரை விட்டு மண்ணின் மேற்பரப்புக்கு மேலே களைகளை அறுக்க வேண்டும். இது பொதுவாக மரங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது
- கோடாரி மற்றும் ரம்பம் கொண்டு அறுக்க வேண்டும்
தூர்வாரல் மற்றும் சங்கிலி மூலம் அகற்றுதல்:
- நீரில் வாழ்கிற களைகளைக் கட்டுப்படுத்த தூர்வாரல் மற்றும் தொடராக்குதல் முறை பயன்படுத்தப்படுகிறது
- களைகளை வேர் மற்றும் வேர் தண்டுடன் கருவிகளை பயன்படுத்தி அகற்றுதலே தூர் வாரலாகும்
- நீரில் மிதக்கக்கூடிய களைகளை அகற்றுதலே சங்கிலி மூலம் அகற்றுதலாகும்
- பெரிய பலமான சங்கிலியைக் கொண்டு களைகளை நீரிலிருந்து முழுவதுமாக அகற்ற வேண்டும்
எரித்தல்:
- இந்த முறையில் செலவு குறையும். வரப்பு ஓரங்கள், சாலை ஓரங்கள், சாக்கடை ஓரங்கள் மற்றும் இதர இடங்களில் வளரும் வேண்டாத தழை வளர்ச்சி அகற்றப்படுகின்றன
- குவித்து வைத்த களைகளை அகற்றி விடவும் இந்த முறை பயன்படுகிறது. இருந்தாலும் இந்த முறை தீயினால் வரக்கூடிய சுற்றுசூழல் பாதிப்புக்களை ஏற்படுத்தும்
ஈரக் காப்பான்:
- மண் மேற்பரப்பில் ஈரக் காப்பான்களை அளிக்கும் போது, களைகளை முளைப்பதற்கு அல்லது மண்ணில் வளர்வதற்கும் இடம் தரக் கூடாது.
இடை உழவு முறை:
- இந்த முறை மிகவும் பயனுள்ளது மற்றும் செலவு குறைவான முறையாகும்
- இடை உழவு கருவிகளில் உள்ள பிளேடு மண் மேற்பரப்புக்கு சற்றுக் கீழே வரை உள்ள களைகளை அறுத்து அழிக்கின்றன. அது மட்டுமல்லாமல் மண் மேற்பரப்பை தளர்வாகவும், உலரவும் வைக்கின்றன. இதனால் களைகள் முளைப்பு தொடர்வது தடுக்கப்படுகிறது
- சில இடை உழவு கருவிகளில் உள்ள டைன்கள், மண்ணின் மேற்பரப்பை திறந்து, களைகளை வேரோடு வெளிக் கொண்டு வருகின்றன.
|