வேளாண்மை :: தீவன பயிர்கள் |
||
தீனாநாத் புல் (பென்னிசெட்டம் பெடிசெல்லேட்டம்) இரகம் : கோ 1 பருவம் இறவையில் வருடம் முழுவதும் பயிரிடலாம். மானாவாரியில் பருவ மழை காலத்தில் பயிரிடப்படுகிறது. பயிர் மேலாண்மை மண் நல்ல வடிகால் வசதியுடைய எல்லா மண் வகைகளும் ஏற்றது. களிமண் அல்லது நீர் தேங்க கூடிய பகுதிகளில் வளராது. உழவு நிலத்தை 2 அல்லது 3 முறை உழுது பண்படுத்த வேண்டும். பண்பட்ட நிலத்தில் பாத்திகள் அமைக்க வேண்டும். உரமிடுதல் அடியுரம்: தொழு உரம் 25 டன்/எக்டர், 20 : 25 : 20 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து/எக்டர் விதை அளவு 2.5 கிலோ/எக்டர் இடைவெளி 35 x 10 செ.மீ அல்லது 30 செ.மீ இடைவெளியில் வரிசையில் தொடர்ச்சியாக விதைக்கவும். பின்செய் நேர்த்தி விதைத்த 30 வது நாளில் களை எடுக்க வேண்டும். நீர் மேலாண்மை மண்ணின் தன்மையைப் பொறுத்து 10 நாட்களுக்கு ஒரு முறை நீர்ப் பாய்ச்ச வேண்டும். பயிர் பாதுகாப்பு பொதுவாகத் தேவையில்லை. அறுவடை விதைத்த 55-60 நாட்களில் அறுவடை செய்ய வேண்டும். பசுந்தீவன மகசூல் இறவைப்பயிர் : 25-30 டன்/எக்டர் - முதல் பயிர். மறுதாம்புப் பயிர் : 15-20 டன்/எக்டர் விதை உற்பத்தி நிலத் தேர்வு விதை உற்பத்திக்கு தேர்வு செய்யப்பட்ட நிலம் தான் தோன்றிப் பயிர் அற்றதாக இருத்தல் வேண்டும். அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் கடந்த பருவத்தில் பிற மற்றும் அதே இரகப் பயிர் பயிரிடப்பட்டிருக்க கூடாது. அவ்வாறு பயிரிடப்பட்டிருந்தால் சான்றளிப்புத் துறையினால் சான்றளிக்கப்பட்ட அதே இரகமாக இருத்தல் வேண்டும். பயிர் விலகு தூரம்
விதைப்பிற்கு முன் விதை மேலாண்மை
அறுவடை
விதை நேர்த்தி
விதைச் சேமிப்பு
பிற மேலாண்மை முறைகள் தீவனப்பயிர்களைப் போன்றே பின்பற்றலாம் |
||
Updated on : 13.11.2013 | ||
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2013 | ||