வேளாண்மை :: தீவன பயிர்கள் |
||||||||||||||||||||||||||
தீவன மக்காச்சோளம் பயிர் மேம்பாடு
சிறப்பியல்புகள்
பயிர் மேலாண்மை உழவு இரும்புக் கலப்பை கொண்டு இரு முறையும், நாட்டுக் கலப்பை கொண்டு மூன்று அல்லது நான்கு முறையும் உழவேண்டும். தொழு உரம் இடுதல் எக்டருக்கு 25 டன் என்ற அளவில் தொழு உரம் அல்லது மட்குடன் 10 பாக் அசோஸ்பைரில்லம் (2000 கிராம்) மற்றும் 10 பாக் பாஸ்போபாக்டீரியா (2000 கிராம்) அல்லது 20 பாக் அசோபாஸ் (4000 கிராம்) ஆகியவற்றை உழும்போது வயலில் இட்டு உழவேண்டும். 2 முதல் 3 முறை உழவு செய்து நிலத்தைப் பண்படுத்தி 60 செ.மீ இடைவெளியில் பார் அமைக்க வேண்டும். பார் பிடித்தல் 30 செ.மீ இடைவெளியில் பார் பிடிக்கவும் அல்லது பாசன நீரின் அளவைப் பொறுத்தும் நிலத்தின் சரிவைப் பொறுத்தும் 10 அல்லது 20 சதுர மீட்டருக்கு பாத்திகள் அமைக்கவும். உரமிடுதல் மண் பரிசோதனையின் படி உரமிடவும், மண் பரிசோதனை செய்யாவிடில் (எக்டருக்கு) அடியுரமாக 30: 40 : 20 கிலோ தழை, மணி , சாம்பல் சத்து இடவும். விதைத்து 30 வது நாளில் மேலுரம் (எக்டருக்கு) 25 கிலோ தழைச் சத்தை இடவும். விதைப்பு இடைவெளி 30 X 15 செ.மீ நீர் நிர்வாகம் விதைத்தவுடன் நீர்ப்பாய்ச்சவும், மூன்றாவது நாளில் உயிர் நீர்க் கட்டவும். களை நிர்வாகம் களைகள் இருக்கும் போது களை எடுக்கவும் அறுவடை கதிர் பால் கட்டும் பருவத்தில் இருக்கும் போது அறுவடை செய்யவும். குறிப்பு: தீவன மக்காச்சோளத்தை தீவன தட்டைப்பயறு கோ – 5 அல்லது கோ எப் சி 8 உடன் 3:1 என்ற விகிதத்தில் பயிரிடுவதன் மூலம் சத்துள்ள தீவனத்தை பெறலாம். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் தயாரிக்கப்படும் மண்புழு உரத்தை எக்டருக்கு 5 டன்கள் தட்டைப்பயறு கலப்புப் பயறுக்கு இடுவதன் மூலம் ஒரு வருடத்திற்கு எக்டருக்கு 105 டன்கள் (வருடத்திற்கு 3 பயிர்கள்) பசுந்தீவனத்தை உற்பத்தி செய்யலாம். இது 7 மாடுகளுக்கும் 3 கன்றுக் குட்டிகளுக்கும் போதுமானது. இந்தக் கால்நடைகளில் இருந்து கிடைக்கும் சாணத்தைக் கொண்டு வருடத்திற்கு 19.4 டன்கள் மண்புழு உரத்தை தயாரிக்கலாம். விதை உற்பத்தி நிலத் தேர்வு விதை உற்பத்திக்கு தேர்வு செய்யப்பட்ட நிலம் தான் தோன்றிப் பயிர் அற்றதாக இருத்தல் வேண்டும். அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் கடந்த பருவத்தில் பிற மற்றும் அதே இரகப் பயிர் பயிரிடப்பட்டிருக்க கூடாது. அவ்வாறு பயிரிடப்பட்டிருந்தால் சான்றளிப்புத் துறையினால் சான்றளிக்கப்பட்ட அதே இரகமாக இருத்தல் வேண்டும். பயிர் விலகு தூரம் விதை உற்பத்திக்கு விதைப் பயிரானது பிற இரகம் மற்றும் சான்று பெறாத அதே இரகத்திலிருந்து வயலைச் சுற்றி 200 மீட்டர் இடைவெளி விட்டு இருத்தல் வேண்டும். 60 X 20 செ.மீ அறுவடை பூக்கள் பூத்த 40 நாட்களில், விதைகள் வினையியல் முதிர்ச்சி அடைகின்றன. எனவே முதிர்ந்த கதிர்களை 45 நாட்களுக்குள் அறுவடை செய்தல் வேண்டும். விதை சேமிப்பு
பிற மேலாண்மை முறைகள் தீவனப்பயிர்களைப் போன்றே பின்பற்றலாம். |
||||||||||||||||||||||||||
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2021 | ||||||||||||||||||||||||||