Agriculture
வேளாண்மை :: தீவன பயிர்கள்

ஊட்டச்சத்து தரம் முன்னேற்றம்

  • புல் மற்றும் தானிய தீவனங்களின் ஊட்டச்சத்தை தட்டைப்பயறு போன்ற பருப்பு வகைகள் கலந்து மேம்படுத்தலாம் (4: 1) அல்லது பசுந்தீவன தயாரிப்பின் போது யூரியாவை தெளிக்கலாம் (1% புதிய எடை அடிப்படையில், 1:1 என்ற அளவில்).

  • பெரும்பாலும் பச்சை தீவனம் தரத்தை மேம்படுத்த வெல்லப்பாகு மற்றும் உப்பு கலக்கலாம்.

  • பொதுவாக 20 கிலோ வெல்லப்பாகு மற்றும் 8 கிலோ உப்பு ஒரு டன் பசுந்தீவனதிற்கு என்ற அளவில் பரிந்துரைக்கப்படுகிறது.

  • பயன்படுத்தப்படும் பிற சேர்க்கைகள் சுண்ணாம்பு கல் (0.5-1.0%), சோடியம் மெட்டாபைசல்பைட் புரொப்பியோனிக்கு மற்றும் ஃபார்மிக் அமிலங்கள் 1% என்ற அளவில் பயன்படுத்தபடுகிறது மற்றும் லேக்டோபேசில்லஸ் போன்ற பாக்டீரியா உயிரிகளும் கூடுதலாக அடங்கும்.

 
Fodder Cholam