உலர்தீவனம் தயாரிக்கும் போது சிலவகை சத்துகள் சீர்மையாக்கலின் போது இழப்பு ஏற்படுகிறது. உலர்தீவன தயாரிப்பில் கீழ்க்கண்டவை முக்கிய இழப்பகளாகும்.
- தாமதமான அறுவடையால் ஏற்படும் சத்துக்கள் இழப்பு.
- இலைகள் உதிர்தல் மற்றும் நுண்பாகங்கள் இழப்பு குறிப்பாக பருப்பு வகை .
- நொதித்தல் இழப்பு உலர் எடையில் 6 சதவிகித அளவிற்கு உள்ளது .
- சூரிய ஒளியில் காய வைக்கும் போது ஆக்ஸிஜனேற்றத்தால் பச்சையம் மற்றும் கரோட்டின் அளவானது 150-200 பிபிஎம் என்ற அளவிலிருந்து 5-10 பிபிஎம் ஆக உலர வைக்கும் போது குறைகிறது. கரோட்டினானது சத்துக்களாக மட்டுமின்றி தீவனத்திற்கு சிறந்த நறுமணத்தை அளிக்கிறது. இதில் முக்கியமானது என்னவென்றால், விலங்குகள் நிறத்தை அறிவதில்லை. அதனால் பசுமை நிறத்தைத்தேர்ந்தெடுக்கிறது. ஆனால் வாசனையைக்கொண்டு தேர்ந்தெடுக்கும்.
- உலர்தலின் போது, புரதம், தழைச்சாறு கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் இழப்பு ஏற்படுகிறது. இதன் விளைவாக நார்ச்சத்து அதிகரித்து செரிக்கும் தன்மை குறைகிறது.அதிகப்படியான காய்தலினால் தாவரத்தினுள் நீர் உட்புகுதலும் அதிகரிக்கிறது. நன்கு காய்ந்த பொருட்கள் மழையினால் அதிக இழப்பை சந்திக்கிறது. குறைவான காய்ந்த பொருட்களுடன் ஒப்பிடும் போது அதிகமாக இருக்கும். பெர்சீம்- ல் பசுந்தீவனம் 22 % புரதச்சத்தைக்கொண்டுள்ளது. அதே தீவனத்தில் உலர் தீவனமாகும்போது இது 16-18 சதமாகக் குறைகிறது.
|