| | |  |  |  | | | | |
வேளாண்மை :: மக்காச்சோளம்

மண்வளம்
நீர்வளம்

தாவர ஊட்டச்சத்து
தாவர வளர்ச்சி ஊக்கிகள்
மகசூலை அதிகரிக்கும்
வழிமுறைகள்

Maize

Maize

Maize

Maize

இறவை மக்காச்சோளம்
1. தொழு உரம் இடுதல்
ஒரு எக்டருக்கு 12.5 டன் தொழு உரம் அல்லது மக்கிய தொழு உரம் அல்லது மக்கிய தேங்காய் நாரைச் சமமாகக் கடைசி உழவிற்கு முன் சீராக இட்டு, அதனுடன் 10 பாக்கெட் (2000 கிராம் எக்டர்) அசோஸ்பைரில்லம் கலந்து பரப்பி நன்கு உழவு செய்யவும்.

2. நிலம் தயாரித்தல்
முதலில் நிலத்தை டிராக்டர் மூலம் கட்டி கலப்பையால் ஒரு முறை உழவு செய்யவும். பின்பு தொழு உரத்ததை நிலத்தில் பரப்பிய பிறகு கொக்கி கலப்பை கொண்டு இரு முறையும் நன்கு உழவு செய்யவும்.

3. பார் பிடித்தல்

  • 60 செ.மீ இடைவெளியில் 6 மீ நீளம்  கொண்டு பார் அமைக்கவும், பார்களுக்கு குறுக்கே பாசன வாய்க்கால் அமைக்கவும்.
  • பார் அமைக்காவிட்டர், 10 அல்லது 20 சதுர மீட்டர் அளவில் நீர்வசதிக்கேற்ப பாத்திகள் அமைக்கலாம்.
  • செலவினை குறைக்க டிராக்டர் மூலம் பார் அமைக்கும் கருவிகளை பயன்படுத்தவும்.

Maize

Maize

4. உரமிடுதல்

    • மண் பரிசோதனைக்கு ஏற்ப தழை, மணி, சாம்பல் சத்துக்களை இடுதல் வேண்டும். இல்லையெனில் பொதுப் பரிந்துரையான 1350, 62.50, 50 கிலோ எக்டர் அளவில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களைப் பொதுவாக அளிக்கவேண்டும்.
    • அடியுரமாக கால் பகுதி தழைச்சத்து, முழு அளவு மணி மற்றும் சாம்பல் சத்து விதைப்பதற்கு முன் இடவும்.
    • பார்களில் கீழிலிருந்து 1,3 பகுதிக்கு 6 செ.மீ ஆழத்திற்கு குழித்து உரங்களை போட்டு 4 செ.மீ வரை மண் கொண்டு மூடவும்.
    • பாத்திகளில் 6 செ.மீ ஆழத்திற்கும், 60 செ.மீ இடைவெளி விட்டும் குழித்து உரக்கலவையை இட்டு 4 செ.மீ வரை மண்கொண்டு மூடவும்.
    • உரக்கலவையை பார்களின் ஓரத்தில் இடவேண்டும். 4 செ.மீ ஆழத்திற்கு மண்ணால் மூடவேண்டும்.
    • அசோஸ்பைரில்லம் நுண்ணுயிர் உரத்தைப் பயன்படுத்தினால் 100 கிலோ தழைச்சத்து மட்டும் அளித்தால் போதும்.

ஊட்டச்சத்து குறைபாடுகளினால் ஏற்படும் அறிகுறிகள்

தழைச்சத்து குறைபாடு : பயிர் வளராமல் அடி இலைகள் மஞ்சள் நிறத்தோற்றத்துடன் தென்படும். பற்றாக்குறை முற்றிய நிலையில் இலைகள் பழுப்பு நிறமாக மாறி காய்ந்துவிடும். இச்சத்து பற்றாக்குறை அறிகுறி முதலில் இலைநுனியில் ஆரம்பித்து நடு நரம்பு வழியாக அடிப்பாகத்திற்கு பரவி இலை முழுவதும் பாதிக்கப்படும். தண்டுகள் மெலிந்து காணப்படும்.
மணிச்சத்து : இள இலைகள் ஊதாகலந்த பச்சை நிறத்துடன் தோன்றும். செடியின் வளர்ச்சி மற்றும் முதிர்ச்சி மெதுவாகவும் கதிர்களில்  மணிகள் குறைவாகவும் இருக்கும்.
சாம்பல் சத்து : இலைகளில் மஞ்சள் அல்லது மஞ்சள் கலந்து பச்சை நிறக்கோடுகள் தென்படும். இலையின் நுனியிலும் ஓரங்களிலும் கருகல் தென்படும். செடியின் நுனியில் மணி பிடிக்காத கதிர்கள் காணப்படும். செடியில் கணுக்களின் இடைவெளி குறைந்து, வலுவிழந்து காணப்படும்.
மெக்னீசிய குறைபாடு : முதிர்ந்த இலைகளின் ஓரமும், இலை நரம்புகளின் நடுப்பகுதியும் பச்சையம் இழந்து காணப்படும். கோடுகள் உள்ளது போன்ற தோற்றம் தென்படும்.
துத்தநாகக் குறைபாடு : அடியிலைகள் நரம்புகளுக்கிடையே பச்சையம் இழந்து மஞ்சள் நிறக் கோடுகள் காணப்படும். மேலும் இளம் இலை விரிவடையாமல் சுருண்டு வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்துடன் இருக்கும்.
இரும்புச்சத்துக் குறைபாடு : இலையின்  நரம்புகளுக்கிடையே உள்ள பச்சையம் குறைந்து வெளிறிக் காணப்படும்.

5. நுண்ணூட்டசத் சத்து இடுதல்
தமிழ்நாடு வேளாண்  துறையில் தயாரிக்கப்படும் நுண்ணூட்டச் சத்துக் கலவையயை எக்டருக்கு 12.5 கிலோ அளவில் 37.5 கிலோ மணலுடன் கலந்து வயலில் பார்களின் மேல் பகுதியில் தூவவும்.

6. விதையளவு
இரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு இரகங்கள் -  கோ.1 மற்றும் கோ.எச் (எம்.4) 20 கிலோ, எக்டர்.

7. இடைவெளி
ஒரு செடிக்கும் மற்றோர் செடிக்கும் இடையே 25 செ.மீ இடைவெளியும், பாருக்கு பார் 60 செ.மீ இடைவெளியும் இருக்கவேண்டும். செடிகளின் எண்ணிக்கை இரகம் மற்றும் வீரிய ஒட்டு இரகங்கள் 6-7 செடிகள் சதுரமீட்டர் சிறுமக்காச்சோளம் 8-9 செடிகள், சதுரமீட்டர்.

8. விதை நேர்த்தி

  1. தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்த ஒரு கிலொ விதையை குளோர்பைரிபாஸட் 20 ஈசி அல்லது மோனோகுரோட்டாபாஸ் 36 டபிள்யூ எஸ்சி அல்லது பாசோலோன் 35 ஈசி (4 மிலி ரூ 0.5 கிராம் கோந்து ரூ. 20 மிலி தண்ணீர்) அல்லது இமிடாகுளோபிரிட் 10 கிராம், கிலோ என்ற அளவில் விதை நேர்த்தி செய்யவேண்டும்.
  2. அடிச்சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த மெட்டாலாக்ஸில் அல்லது திரம் 2 கிராம், கிலோ என்ற அளவில் விதை நேர்த்தி செய்யவேண்டும்.
  3. பூஞ்சாண விதை நேர்த்தி செய்த விகைள விதைப்பதற்கு முன் மூன்று பாக்கெட் அசோஸ்பைரில்லம் (600 கிராம், எக்டர்) கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும்.

9. விதைத்தல்

  1. அடியுரம் இட்பபட்ட வரிசையில் நான்கு செ.மீ ஆழத்தில் விதைத்து மண்ணால் மூடடவேண்டும்.
  2. சரியான முளைப்புத் திறன் இருக்குமெனில் குழிக்கு ஒரு விதை போதுமானது அல்லது குழிக்கு 2 விதை இடவேண்டும்.

Maize

10. களைக் கட்டுப்பாடு

  • அட்ரசின் 50 சதம் நனையும் தூள், 500 கிராம், எக்டர் (900 லிட்டர் தண்ணீரில்) விதைத்த 3 நாட்கள் கழித்து பின் தெளிக்கவேண்டும். பிறகு 40-45வது நாளில் கைக்களை ஒன்று எடுக்கவேண்டும்.
  • களைக்கொல்லி மருந்தினை மண்ணில் போதுமான அளவில் ஈரப்பதம் இருக்கும்போது  தெளிக்கவேண்டும்.
  • களைக்கொல்லி தெளித்த பிறகு மண்ணை எதுவும் செய்யக்கூடாது.
  • களைக்கொல்லி இடாதபோது விதைத்த 17-18வது நாளில் களைக்கொத்து கொண்டு களை எடுக்கவும்.

Maize000011 Maize000012

Maize000013

11. பயிர் எண்ணிக்கை பராமரித்தல்

  1. இரண்டு விதைகள் விதைத்து இருந்தால், 12-15வது நாளில் குழிக்கு நன்கு வீரியமாக வளர்ந்த ஒரு செடியை ஒரு குழிக்கு வைத்து மற்றதை களையவேண்டும்.
  2. விதை முளைக்காமல் உள்ள இடத்தில், தண்ணீரில் ஊறவைத்த விதைகளை குழிக்கு இரண்டு விதை வீதம் விதைத்து உடன் நீர்ப் பாய்ச்சவேண்டும்.

12. களை எடுத்தல்

  1. விதைத்த 30வது நாளில் களைக்கொத்து கொண்டு களை எடுக்கவும்.
  2. பின்னர் மண் அணைத்து பார்களை சரிசெய்யவேண்டும். இதனால் செடிகள் சாயாத தன்மை பெறும்.

13. தழைச்சத்து மேலுரம் இடுதல்

  1. விதைத்த 25வது நாளில், தழைச்சத்தில் பாதி அளவு உரத்தை இட்டு மண்ணால் மூடவேண்டும்.
  2. மீதம் உள்ள கால் பகுதி தழைச்சத்தை விதைத்த 45வது நாளில் இடவேண்டும்.

14. நீர் நிர்வாகம்

  1. மக்காச்சோள பயிர் அதிக வறட்சியும் அதிக நீரையும் தாங்காது. அதனால் பயிரின் தேவைக்கேற்ப நீர்ப்பாய்ச்சுதல் அவசியம்.
  2. பயிரின் முக்கியப் பருவங்களில் (45-65 நாட்கள்) போதுமான நீர் பாய்ச்சுவதால் அதிக மகசூல் பெறலாம்.

மக்காச்சோளம் - வளர்ச்சி பருவம்
விதை முளைக்கும் நேரம்   : 1-14 நாட்கள்
வளர்ச்சி பருவம்          : 15-39 நாட்கள்
பூக்கும் பருவம்            : 40-65 நாட்கள்
முதிர்ச்சி பருவம்          : 66-95 நாட்கள்


களிமண் நிலங்கள்

பருவம்

நீர்ப்பாசன எண்ணிக்கை

விதைத்த பின் நாட்கள்

முளைப்புப் பருவம்

3

விதைத்தவுடன், உயிர் நீர் 4வது நாள் மற்றும் 12வது நாள்

வளர்ச்சிப் பருவம்

2

25வது மற்றும் 36வது நாட்கள்

பூக்கும் பருவம்

2

48வது மற்றும் 60வது நாட்கள்

முதிர்ச்சிப் பருவம்
(தண்ணீரை கட்டுப்படுத்தி விடவும்)

2

72வது மற்றும் 85வது நாட்கள்

செம்மண் நிலங்கள்

பருவம்

நீர்ப்பாசன எண்ணிக்கை

விதைத்த பின் நாட்கள்

முளைப்புப் பருவம்

3

விதைத்தவுடன், உயிர் நீர் - 4வது நாள் மற்றும் 12வது நாள்

வளர்ச்சிப் பருவம்

3

22வது, 32வது மற்றும் 40வது நாட்கள்

பூக்கும் பருவம்

3

50வது, 60வது மற்றும் 72வது நாட்கள்

முதிர்ச்சிப் பருவம்
(தண்ணீரை கட்டுப்படுத்தி விடவும்)

2

85வது மற்றும் 95வது நாட்கள்


15. அறுவடை
அறுவடை பருவம்
பயிரின் வயதைக் கொண்டு கீழ்க்கண்ட அறிகுறிகளை காணவும்.

  1. கதிரின் மேல் தோல் பழுத்து முதிர்ந்தவுடன் காய்ந்துவிடும்.
  2. விதைகள் கடினமாகவும் காய்ந்தும் காணப்படும். இப்பருவம் அறுவடைக்கேற்றது.ஷ

பயிர் அறுவடை

  1. கோணி ஊசியைக் கொண்டு கதிரின் மேல் தோலைக் கிழித்து கதிர்களை பிரித்து எடுக்கவும்.
  2. அறுவடையை ஒரே நேரத்தில் முடிக்கவும்.

கதிரடித்தல்

    • கதிர்களை சூரிய வெளிச்சத்தில் நன்கு காய வைக்கவும்.
    • விசைக் கதிரடிப்பான் கொண்டோ அல்லது டிராக்டரை கதிர்களின் மேலே ஓட்டியோ மணிகளைப் பிரித்தெடுக்கலாம்.
    • மணிகளைத் தூற்றி சுத்தப்படுத்தவும்.
    • பின்பு இவற்றை கோணிப்பையில் சேமிக்கவும்.

வைக்கோலை மாட்டுத் தீவனத்திற்குப் பதப்படுத்துதல்

  • மக்காச்சோளத் தட்டை பச்சையாக இருக்கும் போது மாட்டுக்கு நல்ல தீவனமாகும்.
  • பச்சைத் தட்டையை துண்டு துண்டாக நறுக்கி மாட்டுக்குத் தீவனமாக பயன்படுத்தலாம்.

மானாவாரி மக்காச்சோளம்

1. நிலம் தயாரித்தல்
நிலத்தை உழிக்கலப்பை கொண்டு 50 செ.மீ இடைவெளியில் 3 வருடத்திற்கு ஒரு முறை நன்கு ஆழமாக உழவு செய்யவும்.

2. தொழு உரம் இடுதல்
ஒரு எக்டருக்கு 12.5 டன் தொழு உரம் அல்லது மக்கிய தொழு உரம் அல்லது மக்கிய தேங்காய் நாரைச் சமமாகக் கடைசி உழவிற்கு முன் சீராக இட்டு, அதனுடன் 10 பாக்கெட் அசோஸ்பைரில்லம் கலந்து பரப்பி நன்கு உழவு செய்யவும்.

3. உரமிடுதல்
மண் பரிசோதனைக்கு ஏற்ப தழை, மணி, சாம்பல் சத்துக்களை இடுதல் வேண்டும். இல்லையெனில் மணற்பாங்கான நிலத்திற்கு 600 300 300 கிலோ எக்டர் அளவிலும், களிமண் நிலத்திற்கு 400 200 00 கிலோ, எக்டர் என்ற அளவில் தழை,மணி, சாம்பல் சத்துக்களை அளிக்கவேண்டும்.

4. விதையளவு
நல்ல தரமுடைய விதைகள தேர்ந்தெடுக்கவும். வீரிய ஒட்டு இரகங்களுக்கு 20 கிலோ, எக்டர் என்ற அளவிலும் இரகங்களுக்கு 25 கிலோ, எக்டர் என்ற அளவிலும் பின்பற்றவும்.

5. இடைவெளி
ஒரு செடிக்கும் மற்றோர் செடிக்கும் இடையே 20 செ.மீ இடைவெளியும், பாருக்கு பார் 45 செ.மீ இடைவெளியும் இருக்கவேண்டும். செடிகளின் எண்ணிக்கை இரகம் மற்றும் வீரிய ஒட்டு இரகங்கள் 10-11 செடிகள், சதுரமீட்டர்.

6. நுண்ணுயிர்  உரத்துடன் விதை நேர்த்தி
பூஞ்சாண விதை நேர்த்தி செய்த விதைகளை விதைப்பதற்கு முன் மூன்று பாக்கெட் அசோஸ்பைரில்லம் 1600 கிராம் எக்டர் கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும்.

7. விதைத்தல்
விதையை 4 செ.மீ ஆழத்தில் ஊன்றவேண்டும். விதைக்கும் கருவிகள் விதையை ஊன்றலாம்.

8. ஊடுபயிர் சாகுபடி முறை
அ. ஊடுபயிராக தட்டைப்பயிர் அல்லது உளுந்து போன்றவை மாவட்டங்களின் செம்மண்ணிற்கு உகந்தது.
ஆ. தென் மாவட்டங்களின் கரிசல் மண் துவரையை ஊடுபயிராக பயிரிடலாம்.

பயிர் மேலாண்மை

நாற்றாங்கால் தயாரிப்பு
நிலம் தயாரித்தல்
ஒரு எக்டர் பயிரிட 12.5 சென்ட் (500 ச.மீ) நாற்றாங்கால் தேவை. நல்ல செழிப்பான நிலத்தை உழுது, கடைசி உழவில் அடிஉரமாக 500 கிலோ தொழு உரம் மற்றும் 37.5 கிலோ சூப்பர் பாஸ்பேட்டும் கலந்து இடவேண்டும். நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை இரும்பு கலப்பை  அல்லது ஐந்து முறை நாட்டுக் கலப்பைக் கொண்டு நன்றாக உழவெண்ம். பாத்திகள் 3 மீட்டர் ஒ 1.5 மீட்டர் என்ற அளவில் அமைத்து 30 செ.மீ இடைவெளியில் 15 செ.மீ ஆழத்திற்கு வாய்க்கால் அமைத்து நீர் பாய்ச்சவேண்டும்.

விதையும் விதைப்பும்
விதையளவு : எக்டருக்கு 5 கிலோ
விதைநேர்த்தி : ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பென்டாசிம் கலந்து விதைக்கவும். 3 பாக் அசோஸ்பைரில்லம் மற்றும் 3 பாக் பாஸ்போபாக்டீரியா அல்லது (1200 கிராம்.ஹெ) அசோஸ்பாஸ் உடன் விதை நேர்த்தி செய்யவேண்டும்.

நாற்றாங்கால் விதைப்பு
1 செ.மீ அளவிற்கு விரல்களை கொண்டு கோடு கிழித்து அதில் விதைகளை சீராக விதைக்கவேண்டும். இதற்கு சுமார் 5 கிலோ அளவு விதையை பயன்படுத்தவேண்டும். விதைத்தவுடன் 500 கிலோ தொழு உரத்தைக் கொண்டு நன்றாக மூடிவிடவேண்டும்.
குறிப்பு : விதைகளை ஆழமாக விதைக்கக் கூடாது.
நீர் நிர்வாகம் : 30 செ.மீ அளவு வாய்க்கால் மூலம நீர்ப்பாய்ச்சி, உயர் நாற்றாங்கால் பாத்திகள் முழுமையாக நனையும் படி நீர்ப்பாய்ச்சவேண்டும்.

நீர் நிர்வாகம்

நீர் எண்ணிக்கை

செம்மண்

களிமண்

முதல்  தண்ணீர்

3 ஆம் நாள்

4 ஆம் நாள்

மூன்று

7 ஆம் நாள்

9 ஆம் நாள்

நான்கு

12 ஆம் நாள்

16 ஆம் நாள்

ஐந்து

17 ஆம் நாள்

-

இடைவெளி : 17 முதல் 2 நாட்கள் வயதுடைய நாற்றுக்களை 30 ஒ 10 செ.மீ இடைவெளியில் நடவேண்டும். நேரடி விதைப்பில் 22.5 ஒ 10 செ.மீ இடைவெளியில் விதைக்கவேண்டும். பாக் (1000 கிராம்.ஹெ) அசோஸ்பைரில்லம் மற்றும் 5 பாக் (1000 கிராம். ஹெ) பாஸ்போபாக்டீரியா அல்லது 10 பாக் அசோஸ்பாஸ் (2000 கிராம்.ஹெ) 40 லிட்டர் தண்ணீர் மற்றும்  அரிசி கஞ்சியுடன் கலந்து நாற்றுக்களின் வேர்ப்பாகத்தினை 15-30 நிமிடங்கள் நனைத்து நடவேண்டும்.
நாற்று நடவு : சுமார் 17 முதல் 20 நாட்கள் வயதுடைய நாற்றுக்களை பிடுங்கி நடவு வயலில் முதல்லி நீர்ப்பாய்ச்சி பிறகு நடவேண்டும்.
களை நிர்வாகம்: பூட்டாகுளோார் 2.5 லிட்டர் அல்லது பென்டிமெத்தலின் 2.5 லிட்டர் என்ற களைக்கொல்லியை ஒரு எக்டரில் விதைத்த 3 ஆம் நாளில் கைத் தெளிப்பானால் தெளிக்கவும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
உரமும் உரமிடுதலும் : அடியுரமாக எக்டருக்கு 12.5 டன் தொழு உரம் இடவேண்டும். 10 பாக்  அசோஸ்பைரில்லம் (2000 கிராம் .ஹெ) மற்றும் 10 பாக் (2000 கி.ஹெ) பாஸ்பரசை கரைத்து தரக்கூடிய பாக்டீரியா மற்றும் 20 பாக் அசோபாஸ் கரைத்து தரக்கூடிய பாக்டீரியா மற்றும் 20 பாக் அசோபாஸ் (400 கிராம்.ஹெ) 25 கிலோ மணல் மற்றும் 25 கிலோ தொழு உரம் கலந்து நடவு வயலில் இடவேண்டும். கீழ்க்கண்ட இரசாயன உரங்களையும் இடவேண்டும்.

பயிர்

இடும் முறை

ஒரு எக்டருக்கு இடவேண்டிய சத்துக்கள் (கிலோ)

இப்கோ காம்ப்ளக்ஸ் 10 26 26, யூரியா இடவேண்டிய அறவு (கிலோவில்)

 

 

தழைச்சத்து

மணிச்சத்து

சாம்பல் சத்து

10 26 26

யூரியா

கேழ்வரகு

அடியுரம்

30

30

30

116

40

 

மேலுரம்

30

-

3

3

66

நீர் நிர்வாகம்
நீர்ப்பாசனம் : நடும் பொழுதும், நான்காம் பின்னர் வாரம் ஒரு முறையும் நிலம் மற்றும் சூழ்நிலைக்கேற்ப நீர்ப்பாசனம் செய்யவேண்டும்.
நீர்ப்பாசனம் தேவையான நிலைகள்


விதை முளைக்கும் நேரம்

1-14 நாட்களுக்கு ஒரு முறை

வளர் பருவம்

15-39 நாட்களுக்கு ஒரு முறை

பூக்கும் பருவம்

40-65 நாட்களுக்கு ஒரு முறை

முதிர் பருவம்

65-95 நாட்களுக்கு ஒரு முறை

களிமண் நிலங்களுக்கு


பருவம்

நீர்ப்பாசன எண்ணிக்கை

நடவு செய்த நாட்கள்

 

 

 

கோ.1, கோ எச்.1

கங்கா – 3

முளைக்கும் பருவம்

1

நட்டபிறகு நீர்ப்பாய்ச்சவேண்டும்.

நட்ட பிறகு நீர் பாய்ச்சவேண்டும்.

வளர் பருவம்

2

உயிர் நீர் - 4ம் நாள்

உயிர் நீர் - 4ம் நாள்

 

1

12வது நாள்

12வது நாள்

 

2

25வது நாள்

25வது நாள்

 

3

36வது நாள்

36வது நாள்

பூக்கும் பருவம்

1

48வது நாள்

48வது நாள்

 

2

60வது நாள்

60வது நாள்

கட்டுப்பாடு பாசனம் முதிர்நிலை

1

72வது நாள்

72வது நாள்

அறுவடைக்கு 10 நாட்கள் முன்பே நீர்ப் பாய்ச்சுவதை நிறுத்திடவேண்டும்.
1. அறுவடை

  1. எப்பொழுது அறுவடை செய்யலாம் எனத் தீர்மானிக்கவும்.
  2. கேழ்வரகு ஒரே சமயத்தில் முதிர்ச்சி பெறாத காரணத்தினால் இருமுறை அறுவடை செய்யவேண்டும்.
  3. தாய்ச்செடியில் உள்ள கதிர்களும், 50 சதம் இதர கதிர்களும் பழுப்பு நிறமாக மாறியவுடன் முதல் அறுவடை செய்யலாம்.

2. அறுவடை
முதல் அறுவடை

  1. பழுப்பு நிறமாக மாறிய அனைத்து கதிர்களையும் அறுவடை செய்யவும்.
  2. காய வைத்துஈ தானியங்களைப் பிரித்து தூற்றி சுத்தம் செய்யவும்.

இரண்டாம் அறுவடை

  1. முதல் அறுவடைக்கு ஏழு நாட்கள் கழித்து பச்சைக் கதிர்களையும் சேர்த்து அறுவடை செய்யவும்.
  2. கதிர்களை ஒரு நாள் நிழலில் மூட்டம் போட்டு பதப்படுத்தவும். இதனால் வெப்பநிலை அதிகரிப்பதால் கதிர்கள் சீராக முதிர்ச்சி பெறும். பின்னர் மூட்டை பிடித்து சேமிக்கவும்.

 

மானாவாரி நில சாகுபடி முறை
நீர்த்தேக்க மேலாண்மை
இயற்கை சீற்ற மேலாண்மை
ஒருங்கிணைந்த பண்ணை முறை
அங்கக வேளாண்மை
பசுந்தாள் எருயிடுத
ல்

வறட்சி
வெள்ளம்
களர்/உவர் தன்மை
வெப்பநிலை

வேளாண்மைத் துறை திட்டம்
விண்ணப்பப் படிவம்
நீர்வள,நிலவள திட்டம்
வேளாண் கொள்கை குறிப்புகள்

பயிர்த் திட்டமிடுதல்
பயிர்த்தேர்வு முறைகள்
நுட்ப காலநிலை
வெப்பநிலை
காற்றழுத்தம்
மழை
சூரிய வெப்பம்

 

| முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | உரமேலாணமை | நீர் நிர்வாகம் | களை மேலாண்மை | பூச்சி & நோய் மேலாண்மை |
| புகைப் படங்கள் | கேள்வி பதில் | தொடர்பு கொள்ள |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து