Zinc

துத்தநாகச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

சமச்சீரற்ற உரமிட்டாலும், பயிர்கள் நெருக்கமாக இருந்தாலும். மண் அரிமானம் அதிகமானாலும், துத்தநாகச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக டிஏபி அல்லது மணிச்சத்து இட்ட நிலங்களில் இக்குறைபாடு அதிகரிக்கிறது. புதிதாக வெளிவரும் இலைகள் அகலம் குறைந்து, வாள் போலத் தோற்றமளிக்கும். இலைகளின் அடிப்பகுதி ஊதா நிறத்துடனும். நரம்பிடைப் பகுதிகள் வெளிர் மஞ்சள் நிறத்துடனும் காணப்படும்.

நிவர்த்தி

நூறு லிட்டர் நீரில் 500 கிராம் துத்தநாக சல்பேட் கலந்த கரைசலை, இலைகளின் மேல் தெளிக்க வேண்டும்.
எக்டேருக்கு 10 கிலோ துத்தநாகச் சல்பேட் உரத்தை அடியுரமாக இட வேண்டும்.