Manganese

காளிப்ஃளவரில் மாங்கனீசு சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • வளர்ச்சி மோசமாக இருக்கும். நரம்பிடை சோகை காணப்படும்.
  • ஆழ்ந்த பச்சை நிறத்தில் உள்ள இளம் இலைகளின் நரம்புகளில் பசுமை சோகை காணப்படும் பின் அது இலை விளிம்புகள் வரை பரவிவிடும்.
  • தீவிரமான நிலையில் இலைகள் முழுவதும் மஞ்சள் நிறமாக மாறிவிடும்.

நிவர்த்தி

மாங்கனீசு சல்பேட் 0.3% இரண்டு வார கால இடைவெளியில் இரண்டு முறை தழை தெளிப்பாக தெளிக்கவும்.