Nitrogen

காலிஃப்ளவரில் தழைச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • செடிகள் ஒரே சீராக மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
  • இலைகள் வேரை ஒட்டி வளரும்.
  • முதலில் முதிர்ந்த இலைகளின் அடிப்பகுதியில் ஊதா நிறத்தில் காணப்படும். பின் இலையின் விளிம்புகள் ஊதா நிறத்தில் மாறிவிடும்.
  • இதைத் தொடர்ந்து இலைகள் முழுவதும் ஊதா நிறமாக மாறி வளர்ச்சியின் வேகம் குறைந்து காணப்படும்.
  • செடியின் வேர்த்தொகுதி மோசமாக இருக்கும்.

நிவர்த்தி

1% யூரியாவை இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்.