Iron

மிளகாயில் இரும்புச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • அறிகுறிகள் முதன் முதலில் இளம் இலைகளில் தோன்றும்.
  • ஆரம்பத்தில் சிறிய இலை நரம்புகள் பச்சையாகவே இருக்கும்.
  • மஞ்சள் நிற இலைகளில் வலைப்பின்னல் போன்ற பகுதிகள் பச்சை நிற இலை நரம்புகளில் தோன்றும்
  • இலைகள் ஒரே சீராக மஞ்சள் நிறமாக மாறிவிடும்.
  • இலைகள் காய்ந்து காணப்படும்.

நிவர்த்தி

0.5% இரும்புசல்பேட்டை இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்.