|
செவ்வந்தியில் சுண்ணாம்புச்சத்து பற்றாக்குறை |
அறிகுறிகள் |
- வளர்ச்சி முழுவதுமாக நின்றுவிடும். இதனால் வேர்கள் இறக்க நேரிடும். இது கருப்பு நிறத்தில் மாறிவிடும்
- இலைகள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்
- இடைக்கணுக்கள் சிறுத்துவிடும்
- மேல் உள்ள இலைகள் மிகவும் மெல்லியதாக மாறிவிடும்
- வளர்ச்சி முனையில் உள்ள மொட்டுகள் இறக்க நேரிடும்
- அடி இலைகள் ஆழ்ந்த பச்சை நிறத்திலேயே இருக்கும். இலைகள் முருக்கேறி உடைந்துவிடும்
- பூக்கள் விரிவது தாமதமாகும்
|
நிவர்த்தி |
- சுண்ணாம்புக் க்ளோரைட் 5 கிராம் / லிட்டர் பயன்படுத்தவும்
- சுண்ணாம்பு நைட்ரேட் 5 கிராம் / லிட்டர் 10 நாட்கள் இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்
|