Boron

தென்னையில் போரான் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இளம் மற்றும் புதியதாக வளரும் இலைகளில் உருச்சிதைவு ஏற்படும். இதுவே சிறிய நிலை எனப்படும்.
  • இலைகள் தனித்தனியாக பிரியாமல் இயல்பு நிலை மாறி காணப்படும்.
  • இலைகள் வளைந்து ரம்பப்பல் போன்று தோற்றமளிக்கும்.
  • நுனித் தண்டுகள் கருப்பாகி பின் இறக்க நேரிடும்.
  • இனப்பெருக்கம் பருவத்தில் உருவமாற்றம் மற்றும் காய் பிடிப்பும் குறைந்து காணப்படும்.
  • பழங்கள் சிறுத்தும், இயல்பு நிலை மாறியும் காணப்படும்.

நிவர்த்தி

  • போராக்ஸ் 0.2 – 0.5 கிலோ/மரம்/வருடம் மண்ணில் கலந்து இடவும்.
  • போராக்ஸ் 0.2% தழை தெளிப்பாக தெளிக்கவும்.