மக்காச்சோளத்தில் மெக்னீசியச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
இலைகளில் மஞ்சள் கலந்த வெண்ணிற வரிகள் தோன்றும்.
நரம்பிடைப்பகுதிகள் பழுப்பு நிறமாக மாறிவிடும்.
நிவர்த்தி
மெக்னீசியம் சல்பேட் ((5கிராம் /லிட்டர்) கரைசலை பூ க்கும் மற்றும் தானியம் உருவாகும் பருவங்களில் 10 நாட்கள் இடைவெளியில் இலைவழியாகத் தெளிக்க வேண்டும்.