பருத்தியில் துத்தநாகச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
இலைகளில் நரம்பிடைப் பகுதிகள் மஞ்சளாகவும் பழுப்பு நிறமாகவும் மாறிவிடும்.
அடியிலைகள் முரட்டுத் தன்மையுடனும் ஒடியும்படியும் இருக்கும்
இலை ஒரங்கள் மேல்நோக்கி வளைந்திருக்கும்
நுனிக்கிளைகளில் சிறிய இலைகள் கொத்தாக இருக்கும். அடிப்பாகத்தில் இலைகள் இருக்காது.
காய் பிடிக்கும் காலம் நீடிக்கும்
இடதுபுறம் பற்றாக்குறை இல்லாத நன்கு வளர்ந்த செடிகள்
நிவர்த்தி
5 கிராம் துத்தநாக சல்பேட்டை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து 10 நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள் மறையும்வரைத் தெளிக்க வேண்டும்.