Copper

வெள்ளரியில் தாமிரச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • வளர்ச்சி மற்றும் இலைப் பரப்பு குறைந்து காணப்படும்
  • குறைந்த அளவு காய்களே இருக்கும்
  • முதிர்ந்த இலைகள் பழுப்பு நிறமாக மாறும்
  • பூக்கள் குறைந்து காணப்படும்
  • வளர்ச்சியடையாத காய்களில், பழுப்பு நிறத் தோலும் மற்றும் பழுப்பு கலந்த மஞ்சள் நிறத் தோல் பகுதியும் காணப்படும்

நிவர்த்தி

  • இலை வழியாக காப்பர் சல்பேட் (1 கிராம்/லிட்டர்) கரைசலை வளர்ச்சி, பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் பருவங்களில் தெளிக்க வேண்டும்
  • 10 நாட்களுக்கு ஒருமுறை அறிகுறிகள் மறையும்வரை தெளிக்க வேண்டும்