Nitrogen

 

அறிகுறிகள்

தழைச்சத்து குறைவடையும் பொழுது, பொதுவாகக் காணப்படும் பச்சை நிறம் சிறிது சிறிதாக மாறி பச்சையும் மஞ்சளும் கலந்து, முடிவில் இலை முழுதும் மஞ்சளாக மாறிவிடுகிறது. தண்டு சன்னமாக நார்ச்சத்துடன் கடினமாகிறது. காய்கள் இளம் பச்சையுடன் நுனி கூர்மையாகத் தோன்றும்.

நிவர்த்தி

பற்றாக்குறை அறிகுறி தென்படும் செடிகளின் பக்கவாட்டில் 20 - 50 கிலோ தழைச்சத்து / எக்டர் என்ற அளவில் மேலுரம் இடவேண்டும் அல்லது யூரியா 2% கரைசலை 15 நாட்கள் இடைவெளியில் உயர் கொள்திறன் தெளிப்பான் கொண்டு இலை வழி தெளிப்பு செய்ய வேண்டும்.