Agriculture
தாவர ஊட்டச்சத்து :: எண்ணெய் வித்துக்கள் :: நிலக்கடலை

Manganese

நிலக்கடலையில் மாங்கனீசு சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

தமிழ் நாட்டின் வட மாவட்டங்களில், காரத்தன்மையுள்ள மணல்சாரி நிலங்களில், மாங்கனீசு பற்றாக்குறை பரவலாக இருப்பதால், இப்பகுதியில் விளையும் மணிலாப் பயிரில், மாங்கனீசு பற்றாக்குறை ஏற்படலாம். நன்றாக விரிந்த இலைகளில், நடு நரம்பில் பச்சை நிறம் குறைந்து, மற்ற பகுதிகள் காகிதம் போல் வெளுத்தும், இலைகள் மெலிதாகவும் காணப்படும்.

நிவர்த்தி :

எக்டருக்கு 25 கிலோ மாங்கனீசு சல்பேட் உரத்த, அதிக பாதிப்புள்ள நிலத்தில், அடியுரமாக இட வேண்டும். அறிகுறி தென்பட்டால், நூறு லிட்டர் நீரில் 500 கிராம் மாங்கனீசு சல்பேட் கரைத்த கரைசலை 15 நாள் இடைவெளியில் இரு முறை தெளிக்கவும்.


 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024.

Fodder Cholam