தழைச்சத்து பற்றாக்குறை |
அறிகுறிகள் |
செடியின் வளர்ச்சி குறைவும், இலைகளில் பச்சை நிறம் மங்குவதும், அரம்ப கால அறிகுறிகள் தாம்சன் சீட்லெஸ் போன்ற இரகங்கள் தழைச்சத்து பற்றாக்குறையை அதிகம் வெளிக்காட்டுவதில்லை. தழைச்சத்து மற்ற சத்துக்களைவிட அளவுக்கு அதிகமாக இடுவதால் செடிகள் கொழுத்து, பூக்களையும், பிஞ்சுகளையும் உதிர்த்து விடுகின்றன. பழங்களும் சீராக பழுக்காமல் இருக்கும். |
நிவர்த்தி |
இக்குறையை போக்க பழம் பழுக்க பத்து நாட்களுக்கு முன், பழக் கொத்ததை ஒரு லிட்டர் நீரில் 100 மில்லி கிராம் வீதம் நாப்தலின் அசிடிக் அமிலம் அல்லது 4.5 லிட்டர் நீரில் பத்து மில்லி பிளானோபிக்ஸ் கலந்த கலவையில் நனைத்து எடுப்பதால் சீராக பழங்கள் பழுக்கும். |