Sulphur

கந்தகச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

நிலக்கடலை, அதிக புரதச்சத்து உற்பத்தி செய்யும் பயிர் என்பதால், கந்தச் சத்து மிக அவசியம். வளர்ச்சி குறைவு, செடி முழுவதும் பசுமை நிறம் குறைந்து இளம் பச்சை நிறமாதல், தண்டுப்பகுதி மெலிவடைந்து, செடி பரவாமல் செங்குத்தாகத் தோன்றுவது ஆகியவை கந்தச்சத்து குறைபாட்டால் ஏற்படும் அறிகுறிகளாகும்.

நிவர்த்தி

எக்டருக்கு 200 கிலோ ஜிப்சம் அடியுரமாகவும் மற்றும் 200 கிலோ நட்ட 45ம் நாளிலும் இட்டு மண் அணைக்க வேண்டும்.