Sulphur

கொய்யா

துத்தநாகச்சத்து பற்றாக்குறை

மரம் மற்றும் கிளைகள் வளர்ச்சி குறைதல், இலைகள் வடிவில் சிறுத்து இருத்தல், இலை நரம்பிடைப் பகுதிகளில் மஞ்சள் நிறத் திட்டுகள் தோன்றுதல், வளரும் நுனி மடிதல், குறைவான பூக்கள், காய்கள் சிறுத்து வெடிப்பு ஏற்படுதல் ஆகியவை துத்தநாகச்சத்து பற்றாக்குறையின் அறிகுறிகளாகும்.

பூக்கள் தோன்றுவதற்கு முன்பு, 15 நாட்கள் இடைவெளியில், நூறு லிட்டர்நீரில் 500 கிராம் துத்தநாக சல்பேட் உரம் கரைத்த கரைசலை. இலைகளும் கிளைகளும் நன்றாக நனையும்படித் தெளித்தல்வேண்டும்.

மரத்திற்கு 350 கிராம் வீதம் துத்தநாக சல்பேட் உரத்தை, பூக்க ஆரம்பிக்கும் முன்பு, மரத்திலிருந்து இரண்டு அடி தொலைவில் மரத்தைச் சுற்றி இடுதல்.