|
உருளைக்கிழங்கில் சுண்ணாம்புச்சத்து பற்றாக்குறை |
அறிகுறிகள் |
- உருளைக்கிழங்கின் இலைகளில் பற்றாக்குறை இருந்தாலும் அவை சாதாரணமாகக் காணப்படும்
- கிழங்குகள் சிறியதாகவும். ஒழுங்கற்று பலகோணங்களில் நீட்டிக் கொண்டும், புள்ளிகளுடனும் காணப்படும்.
|
நிவர்த்தி |
- கால்சியம் குளோரைடு அல்லது கால்சியம் நைட்ரேட் 5 கிராம் லிட்டருக்கு என்ற அளவில் பூக்கும் மற்றும் கிழங்கு தோன்றும் போதும். கிழங்கு முதிர்ச்சி அடையும்போதும் இலைவழியாகத் தெளிக்கவேண்டும்
- நடவுக்கு முன் ஜிப்சம் (200 கிலோ /எக்டருக்கு) இடவேண்டும்
- உருளைக்கிழங்கின் அளவு அதிகரிக்க இலைவழியாக கால்சியம் குளோரைடு அல்லது கால்சியம் நைரேட் (5 கிராம்/லிட்டர்) கரைசலை 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவேண்டும்
|