போரான் குறைபாடு போரான் குறைபாடு பெரும்பாலும் மணற்பாங்கான மண் வகைகளிலும் மலைப்பகுதிகளிலும் காணப்படுகிறது. கடலூர், கன்னியாகுமரி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் போரான் குறைபாடு தோன்றுகிறது. |
அறிகுறிகள் |
பயிர்கள் வளர்ச்சி குன்றி காணப்படும். புதிதாக வெளிவரும் துளிர் இலைகளின் நுனிகள் வெளுத்து உள்நோக்கி சுருண்டு காணப்படும். செடியின் முக்கிய தூர் வளராமல் பக்கத்து தூர்கள் வளரும். |
நிவர்த்தி |
எக்டருக்கு 10 கிலோ போராக்ஸ் உரத்தை அடியுரமாக இட வேண்டும். அல்லது பயிர்களின் மீது போராக்ஸ் 0.2 சதம் (2 கிராம் / லிட்டர்) கரைசல் தெளிக்க வேண்டும். |