|
நெல்லில் தழைச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
- பயிர்கள் வளர்ச்சி குன்றி இருக்கும்
- அடி இலைகள் மஞ்சள் நிறமாக மாறும்
- வயல்வெளி முழுவதும் மஞ்சள் கலந்த பச்சை நிறமாக காட்சியளிக்கும்
- தூர்கட்டுதல் குறைந்து காணப்படும்
- கதிரில் மணி பிடித்தல் குறைந்து விடும்
நிவர்த்தி
- எக்டருக்கு 330 கிலோ யூரியாவை பிரித்து மூன்று முறை(110 கிலோ/ ஏக்கர்) என்ற அளவில் மண்ணில் இடவேண்டும்.
- 10 கிராம் யூரியாவை 1 லிட்டர் நீரில் கரைத்து 10 நாள் இடைவெளியில் அறிகுறிகள் மறையும்வரைத் தெளிக்கவேண்டும்.
|