நெல்லில் தழைச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
பயிர்கள் வளர்ச்சி குன்றி இருக்கும்
அடி இலைகள் மஞ்சள் நிறமாக மாறும்
வயல்வெளி முழுவதும் மஞ்சள் கலந்த பச்சை நிறமாக காட்சியளிக்கும்
தூர்கட்டுதல் குறைந்து காணப்படும்
கதிரில் மணி பிடித்தல் குறைந்து விடும்
நிவர்த்தி
எக்டருக்கு 330 கிலோ யூரியாவை பிரித்து மூன்று முறை(110 கிலோ/ ஏக்கர்) என்ற அளவில் மண்ணில் இடவேண்டும்.
10 கிராம் யூரியாவை 1 லிட்டர் நீரில் கரைத்து 10 நாள் இடைவெளியில் அறிகுறிகள் மறையும்வரைத் தெளிக்கவேண்டும்.