|
நெல்லில் கந்தகச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
- பயிர் வளர்ச்சி குன்றி இருக்கும்
- முதலில் இளம் தளிர்கள் மஞ்சளாகவும் பின்னர் மற்றும் இலைகளும் மஞ்சள் நிறமாகிக் காணப்படும்
- தூர்கட்டுதல் குறைந்து விடும்
- கந்தகச் சத்து குறைபாட்டினால் செடி முழுவதும் மஞ்சளாக மாறிவிடும்
- தழைச்சத்து குறைபாடாக இருந்தால் கீழ் இலைகள் மட்டும் மஞ்சளாக இருக்கும்.
நிவர்த்தி
- யூரியாவிற்கு பதிலாக அம்மோனியம் சல்பேட்டை இடவேண்டும் .
- தீவிர குறைபாடு இருந்தால், இலை வழியாக நனையும் கந்தகம் (5 கிராம் ஒரு லிட்டர் நீரில்) கரைசலை இலை வழியாகத், இரண்டு முறை 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
|